ஆர்வக் கோளாறு: வீரப்பனைப் பிடிக்க காட்டுக்குப் போன வாலிபர்கள்
பெங்களூர் & டெல்லி:
வீரப்பனைப் பிடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசையில் இரு வாலிபர்கள் காட்டுக்குள் புகுந்தனர்.
அவர்களை கர்நாடக அதிரடிப்படையினர் பிடித்து எச்சரிக்கை செய்து திருப்பி வைத்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த ஜெயதேவா, சந்தோஷ் ஆகிய இருவரும் பி.யூ.சி. படித்து வருகின்றனர். திடீரெனஇவர்களுக்கு ஒரு ஆசை வந்தது. வீரப்பனைப் பிடிப்பது. அதன் மூலம் வீரப்பன் தலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளலட்சக்கணக்கான ரூபாயை வென்று பணக்காரர்களாவது.
இந்த ஆசையில் இருவரும் பசசை இலைகள் டிசைன் கொண்ட Camouflage கமாண்டோ உடையை வாடகைக்குவாங்கி அணிந்து கொண்டு, பெரிய கத்திகளையும் எடுத்துக் கொண்டு, தொப்பி சகிதம் கடந்த 17ம் தேதிகொள்ளேகால் கிராமத்தில் போய் இறங்கினர்.
பின்னர் மாதேஸ்வரன் மலைப் பகுதிக்குச் சென்றனர். மாதேஸ்வரன் மலைக் கோவிலில் சிறப்புப் பூஜைநடத்திவிட்டு அடுத்து எப்படிச் செல்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். பின்னர் சிலரிடம் வீரப்பனின்சொந்த ஊரான கோபி நத்தத்துக்கு எப்படிச் செல்வது என்று கேட்டுக் கொண்டு நாகமலை என்ற இடத்தைஅடைந்தனர்.
அங்கிருந்த ஒரு சிறிய மலைக் கோவிலில் தங்களிடம் இருந்த கத்திகளை வைத்து பூஜை நடத்திவிட்டு காட்டுக்குள்புகுந்தனர். நெடுவ்தூரம் காட்டுக்குள் நடந்த இவர்களிடம் இருந்த சாப்பாடு, நீர் எல்லாம் காலியாகிவிட பயம்ஆட்கொண்டது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்த நிலையில் அஙகு தேடுதல்வேட்டையில் ஈடுபட்டிருந்த கர்நாடக அதிரடிப்படை வீரர்களின் கண்ணில் பட்டுள்ளனர்.
இவர்களை வீரப்பனின் ஆட்கள் என நினைத்து துப்பாக்கி முனையில் அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர்.இதையடுத்து இருவரும் அழுதுள்ளனர். இவர்களை அதிரடிப்படையினர் தங்கள் முகாமுக்கு கைவிலங்குகள் பூட்டிஇழுத்துச் சென்று விசாரித்தபோது தான் வீரப்பனைப் பிடிக்க வந்த கதை தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிரடிப்படையினர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தர அவர்கள் வந்து விசாரணைநடத்தினர். பின்னர் இவர்கள் கொடுத்த வீட்டு விலாசத்தை வைத்து பெங்களூர் போலீசார் இவர்களது வீடுகளில்சென்று விசாரித்தனர்.
விலாசம் சரியாகவே இருந்தது. மேலும் இவர்களது பெற்றோர் இந்த இருவரையும் தேடிக் கொண்டிருப்பதும்தெரிந்தது.
இதையடுத்து இவர்களை அதிரடிப்படையினரே மீண்டும் கொள்ளேகால் பகுதிக்கு அழைத்து வந்து பஸ் ஏற்றிஊருக்கு அனுப்பி வைத்தனர். இனிமேல் இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடக் கூடாது எனஎச்சரித்து அனுப்பியுள்ளனர்.
பெங்களூரில் இந்த மாணவர்கள் நிருபர்களிடம் பேசுகையில், காட்டுப் பகுதியில் நெடுந்தூரம் சென்ற பிறகு தான்பயமே வந்தது. மிருகங்கள் பலவும் திரிந்தன. மேலும் வீரப்பன் கும்பலிடம் மாட்டி சாகப் போகிறோம் என்றஅச்சமும் வந்துவிட்டது. அந்த நிலையில் தான் அதிரடிப்படையினர் காப்பாற்றினர் என்றனர்.
வீரப்பனை நெருங்கிவிட்டோம்: கிருஷ்ணா
வீரப்பனை தமிழக- கர்நாடக அதிரடிப்படைகள் நெருங்கிவிட்டதாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், காட்டுப் பகுதிக்குள் இரு சிறுவர்கள் சென்றது குறித்து விளக்க முடியாது.யார் காட்டுக்குள் சென்றாலும் அரசு அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்.
வீரப்பன் கும்பலின் நடமாட்டத்தை அதிரடிப்படை கண்காணித்து வருகிறது. கிட்டத்தட்ட அவனைநெருங்கிவிட்டோம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் அவன் இந்தமுறை பிடிபட்டுவிடுவான்.
கர்நாடக தலைமைச் செயலாளர் முன்னாள் ராணுவ அதிகாரியாவார். இதனால் சமீபத்தில் அவர் காட்டுப் பகுதிக்குச்சென்று அதிரடிப்படை வீரர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்தார். அவர்கள் தனது ராணுவ அனுபவத்தை வைத்துயோசனைகளும் தந்துவிட்டு வந்திருக்கிறார் என்றார்.


