For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை அம்பிகா கல்லூரி உரிமையாளர் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Mayurniமதுரை அம்பிகா கல்லூரியில் படித்து வந்த இலங்கை மாணவி மாணவி மயூரணி கொலைசெய்யப்பட்ட வழக்கில் கல்லூரியின் உரிமையாளரான சோலைமலைத் தேவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரது மனைவி ராக்கம்மாள் என்ற பாப்பாத்தி, சோலமலையின் வீட்டில் வாடகைக்குக்குடியிருந்த இலங்கை மாணவர் பாலபிரசன்னா, அவரது மதுரை நண்பர் காஜி அலி, வீட்டுக்காவலாளி வீரண்ணன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.சோலைமலைத் தேவருக்கு இலங்கையிலும் கூட நகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலமேமதுரையில் உள்ள தனது கல்லூரி, பள்ளி மயூரணிகுறித்தும் அங்குள்ள தமிழர்களிடம் பிரபலமடையச்செய்தார். உயர் கல்வி படிக்க விரும்பிய பல மாணவ, மாணவிகளை அவரே இலங்கையில் இருந்துமதுரைக்கு அழைத்து வந்தார்.

இதே போலத் தான் இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த ஆடிட்டரான தியாகராஜனும் தனதுமகள் மயூரணியை மதுரை அம்பிகா கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்க ஆசைப்பட்டார். இதுகுறித்து இலங்கையில் வைத்து சோலைமலைத் தேவருடன் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மயூரணியை சோலைமலைத் தேவரே மதுரைக்கு அழைத்து வந்து தனது அம்பிகாகல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்சில் சேர்த்தார்.

முதலில் அரசடியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி மயூரணி படித்து வந்தார். பின்னர்ஹாஸ்டலில் தங்கிப் படிக்க விரும்பினார். ஆனால், கல்லூரி ஹாஸ்டலில் போதிய வசதிகள்இல்லாததால் தனது வீட்டி மாடியிலேயே தங்கிப் பயிலுமாறு மயூரணியிடம் கல்லூரியின்உரிமையாளரான சோலைமலைத் தேவர் கூறினார்.

இதை ஏற்ற மயூரணி அண்ணாநகரில் உள்ள தேவரின் வீட்டு மாடியிலேயே தங்கினார்.

அங்கு தங்கி கல்லூரிக்கு படித்து வந்த மயூரணிக்கும் 63 வயதான சோலமலைத் தேவருக்கும்இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது அவரது மனைவி ராக்கம்மாளுக்குத் தெரியவரவே, வீட்டில் மோதல் வெடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மயூரணியுடன் இருந்த நட்பைத் துண்டித்துக் கொள்ள சோலமலை முடிவுசெய்தார். ஆனால், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சோலைமலைத் தேவரை மயூரணிதொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த சோலமலை,மயூரணியைக் கொன்று விட முடிவு செய்தார்.

Mayurni
மயூரணியைக் கொலை செய்த பாலபிரசன்ணா. ராக்கம்மா, சோலைமலைத் தேவர், ஹாஜி அலி, வீட்டுக் காவலாளி வீரண்ணன்.
(படங்கள்: நன்றி- தினகரன்)
இந்தக் கொலைத் திட்டத்திற்கு தனது வீட்டின் மற்றொரு பகுதியில் தங்கி தனது அம்பிகாமெட்ரிகுலேசன் பள்ளியிலேயே பிளஸ் டூ படித்து வந்த பாலபிரசன்னாவைப் பயன்படுத்தவும்அவர் முடிவு செய்தார். மயூரமணியைக் கொன்று விட்டால், நீ படிப்பதற்குத் தேவையான அனைத்துஉதவிகளையும் உனக்குச் செய்கிறேன் என்று அவரை இழுத்துள்ளார். அதற்கு பாலபிரசன்னாவும்உடன்பட்டுள்ளார்.

தன்னுடன் படிக்கும் ஹாஜி அலியையும் உடன் சேர்த்துக் கொண்டு மயூரணியைக் கொலைசெய்வதாக சோலைமலைத் தேவரிடம் உறுதியளித்தார்.

பாலபிரசன்ணாவும் இலங்கையைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தன்று அறையில் தனியாக இருந்த மயூரணியை, பாலபிரசன்னா கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார். மயூரணியின் நகைகள், பணத்தையும் கொள்ளையடித்துள்ளார்.

கொலை நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகத்தான் இலங்கையில் உள்ள தனது அக்காசுகந்தினியுடன் செல்போனில் மயூரணி பேசியுள்ளார். அப்போது தன்னுடன் பாலபிரசன்னாஅமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக சுகந்தினியிடம் மயூரணி தெரிவித்துள்ளார்.

பின்னர் அரை மணி நேரம் கழித்து சுகந்தினி மீண்டும் தொடர்பு கொண்டபோது மயூரணியின்செல்போன் இயங்கவில்லை.

இதையடுத்து 3 நாட்கள் கழித்து மயூரணி தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரை வந்த மயூரணியின் தந்தை, தனது மகள்கள் இருவரும் செல்போனில்பேசியபோது பாலபிரசன்னா தன்னுடன் இருப்பதாக மயூரணி தெரிவித்ததாக போலீஸாரிடம்கூறினார். இதையடுத்து பாலபிரசன்னாவை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர் முழுஉண்மைகளையும் சொல்லிவிட்டான்.

மயூரணியின் வீட்டில் இருந்த ரத்தம் உள்ளிட்ட தடயங்களை அழிக்க உதவி செய்ததாகராக்கம்மாளும், வீட்டுக் காவலாளி வீரண்ணன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலீசாரிடம் முதலில் வாக்குமூலம் அளித்த பாலபிரசன்னா, பிளஸ் டூ தேர்வை சரியாக எழுதாததால் காசுகொடுத்து நிறைய மார்க் வாங்க நினைத்தாகவும் அதற்காகவே மயூரணியின் நகை, பணம், கம்யூட்டரைக்கொள்ளையடிக்க கொலை செய்ததாகவும் கூறினார்.

ஆனால், தீவிரமாக விசாரித்தபோது தான் சோலைமலைத் தேவர் சொல்லியே இந்தக் கொலையைச் செய்தததைஒப்புக் கொண்டான்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X