பொடா நீதிமன்றத்தில் கோபால்: துப்பாக்கியை ஒப்படைத்தது போலீஸ்
சென்னை:
"நக்கீரன்" ஆசிரியர் கோபாலை இன்று பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார், ஒருதுப்பாக்கி உள்பட சில பொருட்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோபால் தற்போது போலீஸ் காவலில்வைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அவரை சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்அடையாளம் காட்டிய இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட சில பொருட்களைக்கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் முன்பாக கோபால்ஆஜர்படுத்தப்பட்டார்.
நாளை மாலையுடன்தான் கோபாலின் போலீஸ் காவல் முடிவடைகிறது. எனவே நாளைதான்அவரைப் பொடா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துவதாக இருந்தனர்.
ஆனால் ஒருநாள் முன்னதாகவே இன்று பகல் 12.15 மணிக்கு அவரைப் பொடா நீதிமன்றத்தில்அவர்கள் ஆஜர்படுத்தினர். "எப்போது கோபாலைக் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தீர்கள்?" என்றுஅப்போது போலீசாரிடம் நீதிபதி ராஜேந்திரன் கேட்டார்.
"காலை 11.45 மணிக்குக் கொண்டு வந்தோம். இப்போது உங்கள் முன் ஆஜர்படுத்துகிறோம்" என்றுஅவரிடம் போலீசார் பதில் அளித்தனர்.
பின்னர் சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பியான நாகராஜன் தாங்கள் கோபாலிடம் இருந்துகைப்பற்றியதாகக் கூறி துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை நீதிபதி முன் தாக்கல் செய்தார். அந்தப்பொருட்கள் ஒரு பச்சை நிறப் போர்வையில் மொத்தமாக வைத்துக் கட்டப்பட்டிருந்தன.
"இது தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை எழுத்துப் பூர்வமாக என்னிடம் எழுதிக்கொடுங்கள்" என்று கோபாலிடம் நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்குபேப்பர், பேனா வழங்கப்பட்டன.
அவர் கடிதத்தை எழுதி நீதிபதியிடம் ஒப்படைத்தார்.
தன்னிடம் இருந்து துப்பாக்கி மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறுவது பொய்என்று கோபால் தனது கடிதத்தில் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே போலீஸ் காவலில் தான் வைக்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்கோபால் தாக்கல் செய்திருந்த மனுவை ஜூன் கடைசி வாரத்திற்கு நீதிபதி தினகரன் மற்றும் நீதிபதிஅசோக் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்தது.


