ஹெல்மெட் அணிந்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நூதன போராட்டம்
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்6வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் இன்று மனிதச் சங்கிலிப்போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரி மாணவ,மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவக் கல்லூரியில் 5ஆம் ஆண்டு படிக்கும் ஹவுஸ் சர்ஜன்களும் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மாணவ, மாணவிகள் உடனடியாகத் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் அதை மாணவ, மாணவிகள் நிராகரித்துவிட்டனர்.
போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்என்றும் மாணவ, மாணவிகள் வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் அவர்களுடைய போராட்டம்இன்று 6வது நாளாக நீடிக்கிறது.
சென்னையில் உள்ள மெமோரியல் ஹால் முன்பாகக் கூடிய மருத்துவக் கல்லூரி மாணவ,மாணவிகள் பிரம்மாண்டமான மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினர். இவர்களில்பெரும்பாலான மாணவர்கள் தங்கள் தலைகளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு நூதன முறையில்போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூரில் 165 மாணவிகளும் 57 மாணவர்களுமாக மொத்தம் 222 பேர் கைகோர்த்துநின்றவாறு மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். சுமார் அரை கி.மீ. நீளத்திற்கு அவர்கள்கைகோர்த்து நின்று கொண்டிருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தப் போராட்டம் நீடித்தது.
இதேபோல் மதுரை மற்றும் தஞ்சாவூரிலும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மனிதச் சங்கிலிபோராட்டம் நடத்தினர். திருச்சியில் நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்ரத்த தானம் செய்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அரசு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்என்றும் நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, நேற்றைய போராட்டத்தின்போது மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பலஇடங்களில் சிறப்பு ரத்த தான முகாம்களை நடத்தினர். கோயம்புத்தூர் மாணவ, மாணவிகள் வாயில்கறுப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மாணவ, மாணவிகளோ தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கோரி கையெழுத்து வேட்டைநடத்தினர். திருச்சி மருத்துவ மாணவ, மாணவிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகஅரசுக்குத் தந்திகளை அனுப்பி போராட்டம் நடத்தினர்.


