தமிழ் மீடியத்தை தடை செய்தது யார்?: கருணாநிதி
சென்னை:
மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை நிறுத்தி திமுக ஆட்சிக் காலத்தில்தான் உத்தரவுபிறப்பிக்கப்பட்டது என்று கல்வி அமைச்சர் செம்மலை கூறியுள்ளதை கருணாநிதி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்றுசட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
ஆளுநரின் உரை ஆங்கிலத்தில் மட்டும் போதும் என்று கூறி தமிழை ஒதுக்கியவர்கள் தற்போதுதமிழ் பற்றாளர்களாக மாறியுள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இப்போது நான் சொல்லும் ஒருகுறிப்பை தமிழக மக்கள் நெஞ்சில் பதிய வைத்துக் கொள்வது நல்லது.
கடந்த 4ம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தபோது, "மெட்ரிகுலேஷன்பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி வகுப்புக்களை மூடவும் ஆங்கில மீடியத்திற்கு இணையாகத் தமிழ்மீடியம் கோரிக்கைகள் வந்தால் அதைத் தடுக்கவும் செய்யுமாறு அரசு ஆணை எண் 56ல்கூறப்பட்டுள்ளது. இந்த ஆணை எப்போது பிறப்பிக்கப்பட்டது?" என்று காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை உறுப்பினர் வள்ளல்பெருமாள் கேள்வி கேட்டார்.
இதற்கு சபாநாயகர் காளிமுத்து பதிலளிப்பதற்கு முன்பாகவே செம்மலை எழுந்து கொண்டுபதிலளித்தார். "அந்த அரசாணை திமுக ஆட்சிக் காலத்தில்தான் போடப்பட்டது. இதிலிருந்தேதிமுகவினருக்கு தமிழ் மீது எவ்வளவு அக்கறை என்பதைப் புரிந்து கொள்ளலாம்" என்றார்செம்மலை. இதைக் கேட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் கரவொலி எழுப்பியுள்ளனர்.
ஆனால், அமைச்சர் கூறிய இந்தத் தகவல் உண்மைதானா என்பதை அவர்கள் யோசித்தேபார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட அந்த அரசாணை கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 12ம்தேதிதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேதியில் ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார் என்பதையும் அதிமுகதான் ஆட்சியில்இருந்தது என்பதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே அமைச்சர் முழுக்க முழுக்கபொய்யான தகவலையே சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழை ஒழிக்கும் ஒரு ஆணையை அதிமுக அரசே பிறப்பித்து விட்டு அந்தப் பழியைத் தூக்கிமுந்தைய திமுக ஆட்சி மீது கல்வித் துறையின் அமைச்சரே போடுகிறார் என்றால் இது எத்தகையமோசடி என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் கருணாநிதி.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு:
இதற்கிடையே கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஒருவாரத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்களே சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துபோயுள்ளதற்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாகும் என்று கூறியுள்ளார்.
வேலூர் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், கோயம்புத்தூர் கொலைச் சம்பவம், காஞ்சிபுரத்தில்லாரி ஏற்றி அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம், மதுரை கொலைகள் என சமீபத்தில் நடந்த பெரும்கிரைம் பட்டியலை கருணாநிதி வெளியிட்டுள்ளார்.


