சார்ஸ் பெயரால் ஒரு சூப்பர் மோசடி!
சென்னை:
சார்ஸ் பீதியால் உலகே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பெயரைப் பயன்படுத்தி,சென்னையைச் சேர்ந்த 3 பேர் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரும் நண்பர்கள் செளகத் அலி, ரபீக் அகமதுஆகியோரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் ஏஜென்சியை நடத்தி வருகிறார்கள்.
சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 50 பேரிடம் தலா ரூ.80,000 வரைஇவர்கள் பணம் வாங்கியுள்ளனர்.
சிலநாட்கள் கழித்து பணம் கொடுத்தவர்கள் வந்து வேலை என்னவாயிற்று என்று விசாரித்துள்ளனர்.அதற்கு அவர்கள் "இப்போது சிங்கப்பூரில் சார்ஸ் வந்து விட்டது. எனவே வேலை வாங்கித் தரமுடியவில்லை" என்று கூறியுள்ளனர்.
பிறகு திடீரென்று அந்த 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அதிர்ச்சியடைந்த சுமார் 20 பேர்சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம்புகார் செய்தனர்.
சார்ஸைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகியுள்ள 3பேரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.


