ஸ்டாலினுக்கு நிபந்தனை தளர்வு: காவல் நிலையத்தில் கையெழுத்திட தேவையில்லை
சென்னை:
மு.க.ஸ்டாலினின் ஜாமீன் நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
ராணி மேரிக் கல்லூக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். அனைவரும் கடந்த 24ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜாமீனில் விடுவித்த நீதிபதி ஜெயபால், ஏப்ரல் 26ம் தேதி வரை ஸ்டாலின் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம்காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்துப் போட வேண்டும் என்றும், அதன் பிறகு 27ம் தேதிமுதல் மே 20ம் தேதி வரை சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு கையெழுத்திடவேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார்.
இந்த நிபந்தைனையை ஏற்று மதுரையில் தங்கியிருந்த ஸ்டாலின் இப்போது சென்னையில் கையெழுத்துப் போட்டுவருகிறார். அதே நேரத்தில் இந்த நிபந்தனையைத் தளர்த்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனுதாக்கல் செய்தார்.
அதில், சென்னை மாநகர முன்னாள் மேயர் பதவியில் இருந்த நான் திமுகவின் இளைஞர் அணிச்செயலாளராகவும், முன்னணித் தலைவர்களில் ஒருவனாக இருப்பதாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்சென்று கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றுகோயிருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் போலீஸ் நிலையத்தில் தினசரி ஸ்டாலின் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்தார்.


