வேலூர் நோயாளிக்கு மீண்டும் சார்ஸ் சோதனை
வேலூர்:
வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்ஸ் நோயாளியான ஏழுமலைக்கு 2வது முறையாக மீண்டும்ரத்தப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜார்ஜ் சாண்டி கூறுகையில்,
ஏழுமலை சார்ஸ் நோயிலிருந்து தற்போது முற்றிலும் குணமடைந்து விட்டார். ஆனாலும் அவருடைய ரத்தம்மீண்டும் பரிசோதிக்கப்பட உள்ளது.
ஆனால் மீண்டும் அவருடைய ரத்தம் புனேக்கு அனுப்பப்படாது. சி.எம்.சி. மருத்துவமனையிலேயே பலவிதமானபரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
ஏழுமலைக்கு எக்ஸ்ரே சோதனைகளும் நடைபெற உள்ளன. அதன் பின்னர் உலக சுகாதார அமைப்பின்வழிகாட்டுதலின் படி அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
மேலும் அடுத்த ஒரு சில நாட்களில் சி.எம்.சி. மருத்துவமனையிலேயே சார்ஸ் நோய் இருக்கிறதா என்பது குறித்தசோதனை மையம் தொடங்கப்பட உள்ளது என்றார் டாக்டர் ஜார்ஜ்.
இதற்கிடையே புனே சித்தார்த் மருத்துவமனையில் சார்ஸ் நோயால் நேற்று பாதிக்கப்பட்ட 9 மருத்தவமனைஊழியர்களும் விரைவாக குணமாகி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் தனி வார்டில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும்உறவினர்களுக்கும் சார்ஸ் நோய் தாக்கியுள்ளதாக என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.


