தொலைபேசி கட்டணமாக ரூ. 1.20 தான் வசூலிக்க வேண்டும்: பி.எஸ்.என்.எல்
சென்னை:
பி.சி.ஓக்கள் எனப்படும் பொதுத் தொலைபேசிகளில் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால்அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மே 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய தொலைபேசி கட்டண முறைஅமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய முறைப்படியே பொதுத் தொலைபேசி நிலையங்களில் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும்.
ஆனால், பல இடங்களில் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன.சாதாரண தொலைபேசியிலிருந்து, செல்போன்களுக்குப் பேச ஒரு நிமிடத்திற்கு ரூ. 1.20 வாங்க வேண்டும். இதற்குமேல் வசூல் செய்வது கடும் குற்றமாகும்.
எனவே, இதுபோன்ற புகார்களுக்கு ஆளாகும் பொதுத் தொலைபேசி நிலையங்களின் இணைப்புகள்முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். இதுபோல எச்சரிக்கை விடுப்பது இது முதல்முறையல்ல. பொதுத் தொலைபேசிகளில் ரூ. 1.20தான் கட்டணம் என்றாலும் குறைந்தபட்சம் ரூ. 2 தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தடுக்க பி.எஸ்.என்.எல். எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், அவ்வப்போதுஅறிக்கை மட்டும் வந்துவிடுகிறது.


