ஜெயலலிதாவின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்: டி.ஆர். பாலு
டெல்லி:
பிரதமருக்கு உரிய அதிகாரத்தை இப்போதாவது முதல்வர் ஜெயலலிதா புரிந்து கொண்டது மகிழ்ச்சி தருவதாகமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சென்னை விமான நிலைய புதிய கட்டடத் திறப்பு விழாவில் தனக்கு மேடையில் ஓரத்தில் இடம் ஒதுக்கிகேலப்படுத்தியதாகக் கூறி நிகழ்ச்சியைப் புறக்கணித்தார் ஜெயலலிதா. இது தொடர்பாக மத்திய அமைச்சர்பாலுவையும் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் ராணி மேரிக் கல்லூரியை இடிக்கத் தடை விதித்து பாலு விதித்த உத்தரவு தொடர்பாக பிரதமரிடம் பேசப்போவதாகவும் பாலுவை நீக்கக் கோரப் போவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பாலு இன்று பதில் தந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
என்னை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி பிரதமருக்குக் கடிதம் எழுதப் போவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில்பேசியுள்ளார். இப்போதாவது பிரதமர் வாஜ்பாயின் ஈடு இணையற்ற மேலதிகாரத்தை ஜெயலலிதா புரிந்துகொண்டுவிட்டார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ராணி மேரிக் கல்லூரி விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்துப் பேச நான் தயாராக இல்லை.இந்த விவகாரத்தில் ஜெயலலிதா உதிர்த்த கொடுமையான, குழந்தைத்தனமான வார்த்தைகளுக்கு பதில் தர நான்விரும்பவில்லை. அவரது பேச்சு கருத்து சொல்வே தகுதியானவை அல்ல.
டாக்டர் கலைஞரின் சீரிய- கேள்விக்கிடமற்ற தலைமையிலும் மாறனின் வழிகாட்டுதலிலும் அரசியலிலில்பண்பட்டவன் நான். ஜெயலலிதாவ போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சுகிறவன் நான் அல்ல என்று கூறியுள்ளார்பாலு.


