டான்சி தீர்ப்பு பயம்?: சட்டமன்ற கூட்டத் தொடர் முன்னதாகவே நிறைவு
சென்னை:
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திட்டமிட்டதை விட 4 நாட்கள் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்படஉள்ளது. இதற்கு டான்சி தீர்ப்பு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதா வாங்கியது தொடர்பாக தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பாதகமாகவே இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், தீர்ப்பு எப்போதுவெளியாகும் என்று தெரியவில்லை.
ஜெலலிதாவின் தலைக்கு மேல் கத்தியாக இந்தத் தீர்ப்பு தொங்கிக் கொண்டுள்ளது.
இந் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. ஆனால், இன்றுகாலை அவை கூடியதும் வரும் 10ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்துக் கொள்வதாக சபாநாயகர்காளிமுத்து அறிவித்தார்.
இதனால் 10ம் தேதிக்கு மேல் எந்த நேரத்திலும் டான்சி தீர்ப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தனக்கு எதிரான தீர்ப்பு வரும் நிலையில் அப்போது சட்டமன்றக் கூட்டம் நடப்பதை முதல்வர் விரும்பவில்லைஎன்று கூறப்படுகிறது.
மேலும் எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசும் முயற்சிகளில் சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து ஈடுபட்டு வரும்நிலையில் டான்சி தீர்ப்பு வரும்போது அனைத்து எம்.எல்.ஏக்களும் சென்னையில் இருப்பதும் நல்லதல்ல எனமுதல்வர் நினைப்பதாகத் தெரிகிறது.


