For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு டாக்டர்களும் போராட்டம்: இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்- அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போராட்டம் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களக்கு ஆரவாக அரசு டாக்டர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கப் போவதாகஅறிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது அத்தியாவசியப் பணிகள் சட்டத்தின் (எஸ்மா சட்டம்) கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனநலத்துறை அமைச்சர் செம்மலை எச்சரித்துள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டுவாரமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அரசுடன் நடந்தபேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கல்லூரி விடுதிகள், மெஸ்களை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஆனால், இதையும் மீறி போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. விடுதிகள் மூடப்பட்டதை எதிர்த்து சாலை மறியல் செய்த மாணவர்கள்கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அரசு டாக்டர்களின் ஆதரவைமாணவர்கள் கோரியுள்ளனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு டாக்டர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். இதுதொடர்பாக முடிவெடுக்க சென்னைமருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு டாக்டர்கள் சங்கத்தில் நாளை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சர் எச்சரிக்கை:

இந் நிலையில் சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அமைச்சர் செம்மலை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் அரசு மருத்துவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள்உடனே அதைக் கைவிட்டு வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும். இவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால்எஸ்மா சட்டம் பாயும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி தரும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. (ஆனால், கல்லூரி தொடங்கலாம் என நோ-அப்ஜெக்ஷன் சான்றிதழ் தர முடியும். இதைத் தரக் கூடாது என்பது தான் மாணவர்களின்முக்கியக் கோரிக்கை).

போராட்டம் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் முடிவு செய்தால் அதை மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் எதிராகத் தான் நடத்தவேண்டும்.

இரும்புக் கரம் அடக்கும்:

அதே நேரத்தில் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது, பட்ட மேற்படிப்பு பயில்வது ஆகியவை தொடர்பானமாணவர்களின் கோரிக்கைகள் குறித்து இந்திய மருத்துவக் கவுனசிலிடம் பேசி வருகிறோம்.

ஆனால் கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு படித்துவிட்டுதமிழகத்தில் வந்து பணியாற்றும் மாணவர்களையோ, அங்கு படிக்கச் செல்லும் மாணவர்களையோ இந்தப் போராட்டத்தால் மாணவர்கள்தடுத்துவிட முடியுமா?.

யாரோ தூண்டிவிட்டு வருவதால் போராட்டத்தை நடத்தி வருகிறீர்கள். போராட்டம் நடத்துபவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டுஅடக்கும் என்றார் செம்மலை.

பேச அனுமதி தராத காளிமுத்து:

அப்போது பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் தலையிட்டு கேள்வி கேட்க முயன்றனர். ஆனால், அதற்கு சபாநாகர் காளிமுத்துஅனுமதி தரவில்லை. இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரம் நடந்தபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில்இல்லை.

அவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், அரசு டாக்டர்கள் மீது எஸ்மாசட்டம் பாயும் என அரசு அறிவித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

வெளிநடப்பு:

வெளிநடப்பு செய்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், எதற்கெடுத்தாலும் எஸ்மாவும் இரும்புக் கரம் ஒடுக்குவதும் தான் இந்தஅரசுக்கு வழக்கமாகிவிட்டது. மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ஜனநாயகத்தில் உள்ள உரிமைகளைக் கூட பறிக்கிறார்கள். இதுஎன்ன அரசோ என்றார்.

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் பேசுகையில், சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சிகளை பேசவே அனுமதிப்பது இல்லை.சட்டசபைக்கு வெளியே யாராவது அரசை எதிர்த்துப் பேசினால் எஸ்மாவா? என்றார். இதை கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்எம்.எல்.ஏ. பழனிச்சாமியும் தெரிவித்தார்.

காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறுகையில், மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பேசி பிரச்சனையைத் தீர்க்க அரசுமுயற்சிக்காவிட்டால் இதில் அரசியல் கட்சிகளும் பொது மக்களும் கூட தலையிட வேண்டி வரும் என்றார்.

நோயாளிகள் நிலை கவலைக்கிடம்:

இப்போது பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அரசு டாக்டர்களும் போராட்டத்தில் குதித்தால் நோயாளிகளின் நிலைமை மேலும் மோசமடையும்.

போலீஸ்- மாணவர்கள மோதல்:

இதற்கிடையே இன்று சென்னையில் உள்ள மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் ரவீந்திரநாத்தைச் சந்திக்க வந்த மாணவர்களை போலீசார் தடுத்துநிறுத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வெளியே பயங்கர சத்தம் கேட்டதையடுத்து ரவீந்திரநாத் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். போலீசாரை ஒதுங்கச் சொல்லிவிட்டுமாணவர்களிடம் அவர் பேச்சு நடத்தினார்.

அப்போது தங்களை போலீசார் சமூக விரோதிகளைப் போல நடத்துவதாகவும் சட்டையைப் பிடித்து இழுத்தும், அடித்தும் வேன்களில் ஏற்றி போலீசார் கைதுசெய்து வருவதாகவும் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக மாணவிகளும் கூறினர்.

அவர்களை சமாதானப்படுத்திய ரவீந்திரநாத், அரசுடன் பேசி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துவிட்டுச் சென்றார்.

கைது தொடர்கிறது:

இதன் பின்னர் கல்லூரி விடுதியை உடனே திறக்கக் கோரி மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பினர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்துவேன்களில் ஏற்றிச் சென்றனர். அதே போல சேலம், திருச்சி, மதுரை உள்பட 12 அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே இன்றும்போராட்டம் நடத்தினர்.

வரும் ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் மருத்துவ மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X