For Daily Alerts
Just In
புதுக்கோட்டை அருகே கடலில் மூழ்கி 3 மீனவர்கள் சாவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் அருகே நடுக்கடலில் நாட்டுப் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம்செய்த 3 மீனவர்களும் கடலில் மூழ்கி பலியாயினர்.
ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த இளையராஜா, ராஜு டேனியல் மற்றும் ஒருவர் உள்பட 3 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக நேற்று இரவு கடலுக்குள் சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விட்டது. இதில் அந்தப்படகில் இருந்த மூன்று மீனவர்களுமே கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 பேரின் உடல்களும் இன்று காலை கரையில் ஒதுங்கின. உடல்களைக் கைப்பற்றிய கோட்டைப்பட்டனம்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


