பின்லேடன் ஸ்டைலில் கேசட் அனுப்பினார் சதாம்
சிட்னி:
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹூசேன் அனுப்பிய ஆடியோ கேசட் ஆஸ்திரேலியப் பத்திரிக்கைக்குக்கிடைத்துள்ளது.
அராபியத் தொலைக்காட்சியான அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபர்களிடம் கொடுக்க முடியாமல் போனதால்ஆஸ்திரேலியப் பத்திரிக்கை அலுவலகத்தில் அவர்கள் அந்த கேசட்டைக் கொடுத்தாகக் கூறப்படுகிறது.
கரகரப்பான, மிகவும் களைப்படைந்த குரலில் அதில் சதாம் பேசியுள்ளார்.
"ஈராக் மக்களே, நம்முடைய பெருமைக்குரிய நாட்டிலிருந்துதான் நான் பேசுகிறேன். நீங்கள் மீண்டும் ஒன்றுதிரண்டு அமெரிக்கப் படைகளுக்கு எதிரான அதிரடித் தாக்குதல்களை துவக்குகள். நம்முடைய போராட்டத்தைமீண்டும் உலகுக்குக் காட்டுவோம்ய எதிரிகளை நாட்டை விட்டுத் துரத்தும் வரை ஓய மாட்டேன்.
நம் நாட்டின் பெருமைக்குரிய தேசிய அருங்காட்சியகத்தைக் கொடுமையாகச் சேதப்படுத்தி அதிலிருந்தபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதற்கு அமெரிக்கப் படையினர்தான் காரணம். அவர்களுக்குத் தகுந்த பாடம்கற்பிக்க வேண்டும்" என்று அந்த கேசட்டில் பேசியுள்ளார் சதாம்.
அந்த கேசட் ஈராக்கைச் சேர்ந்த 13 பேரிடம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே அந்தக் குரல்ஏறக்குறைய சதாமின் குரல் போலத்தான் உள்ளது என்று கூறியுள்ளனர்.


