நாளை முதல் அரசு ஊழியர்கள் போராட்டம்: எஸ்மா பாயும்
கடலூர்:
தமிழகம் முழுவதிலும் உள்ள 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் நாளை முதல் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டு கைதாகி, சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தைத் தடுக்க அத்தியாவசியப் பணிகள்சட்டமான எஸ்மாவை அமலாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்கக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தற்போது அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்து மீண்டும் போராட்டத்தைத்தொடங்கவுள்ளன.
முக்கியமான போராட்டக் குழு கூட்டமைப்புகளான ஜாக்டியோ-ஜியோ வும், சூரியமூர்த்தி தலைமையிலான கோட்டோ--ஜியோவும்இணைந்து போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதால் அரசு நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பிக்கும் சூழ்நிலை ஏற்ப்டுள்ளது.
இந்த இரு அமைப்புகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நந்தது. அப்போது, போராட்டத்தை எந்த நிலையிலும்கைவிடுவதில்லை என்றும் சலுகைகள் திரும்பக் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களது போராட்டத்தை ஒடுக்க பல்வேறு வழிகளில் அரசு முயற்சிப்பதாகவும், ஆனால் அதற்கு அரசு ஊழியர்கள் இடம் கொடுக்கமாட்டார்கள் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அத்தியாவசியப் பணிகள் சட்டமானஎஸ்மாவின் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.


