For Daily Alerts
Just In
முதுமலை சரணாலயத்தில் யானைக்கு மதம் பிடித்தது
நீலகிரி:
முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தில் உள்ள ஆண் யானைக்கு மதம் பிடித்துள்ளதால், மற்ற யானைகளிடமிருந்துதனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதுமலை சரணாலயத்தில் மொத்தம் 25 யானைகள் உள்ளன. இவற்றில் ஒரு ஆண் யானைக்கு மதம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த யானை மற்ற யானைகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த யானை பூரண குணமாக ஒரு மாதம் கூட ஆகலாம் என்று தெரிகிறது.


