For Quick Alerts
For Daily Alerts
Just In
காயிதே மில்லத் மணி மண்டபம் இன்று திறப்பு
சென்னை:
காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயிலின் நினைவாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் இன்றுதிறக்கப்படவுள்ளது.
கண்ணியம் மிக்க காயிதே மில்லத் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் முகம்மது இஸ்மாயில் முஸ்லீம் லீக் தலைவராகஇருந்தவர். அறிஞர் அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர். திராவிடக் கட்சிகளுடன் நல்லுறவு வைத்திருந்தார்.
காயிதே மில்லத்திற்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர்கல்லூரி வளாகத்தில் இந்த மணிமண்டபம் ரூ. 51 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணி மண்டபத்தை இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர்ராஜா திறந்து வைக்கிறார். செய்தி ஒளிபரப்புத் துறைஅமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியனும் இதில் பங்கேற்கிறார்.


