For Daily Alerts
Just In
சென்னை ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ
சென்னை:
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்கம்ப்யூட்டர்கள், முக்கியமான தஸ்தாவேஜுகள் எரிந்து சாம்பலாயின.
பாரிமுனை லிங்குச் செட்டித் தெருவில் ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது.இங்கு இன்று காலை திடீரென தீப் பிடித்துக் கொண்டது. பயங்கரமாகப் பரவிய இந்தத் தீயில்நிறுவனத்தின் அனைத்து அறைகளும் எரிந்து சாம்பலாயின.
அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், தஸ்தாவேஜுகள் எரிந்து சாம்பலாயின. ரூ. 3 லட்சம் வரைநாசமாகி விட்டதாகத் தெரிகிறது.
மின் கசிவே விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் சிக்கிய நிறுவனம், வேளாண்உற்பத்திக் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.


