For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்பாடு இல்லை, மாற்று சீருடை இல்லை: வரலாறு படைத்த ரேணுகாதேவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

படிப்பு, படிப்பைத் தவிர வேறொன்றுமில்லை ரக மாணவமணிகள் தான் மாநில அளவில் பிளஸ் டூ தேர்வில்சாதனை படைத்துள்ளனர்.

மாநில அளவில் விலங்கியல் பாடத்தில் சென்னை மாணவி வினிதா முதலிடம் பெற்றுள்ளார். அவர் கடந்த 10வருடங்களாக ஒரு சினிமா கூட பார்த்ததில்லையாம். படிப்பே கருமமாக இருந்துள்ளார்.

அதே போல, மாற்று சீருடை கூட இல்லாமல், வறுமையின் கோரத்திற்கு இடையே, வரலாற்றுப் பாடத்தில்மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மாணவி ரேணுகா தேவி.

இன்னொரு இளம் விதவை மாணவியான கனிமொழி டெக்ஸ்டைல் டிசைனிங்கில் மாநிலத்திலேயே மூன்றாவதுஇடம் பிடித்துள்ளார்.

சினிமாவே பார்க்காமல்...

சென்னை, அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர் மாணவி வினிதா. இவர்விலங்கியல் மாநிலத்திலேயே முதலிடத்தையம் தாவரவியலிலும் மாநிலத்தில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

பெற்றோருக்கு ஒரே மகளான வினிதாவுக்கு செல்லம் அதிகம். பெற்றோர் தன் மீது காட்டிய பாசத்திற்கும்,அக்கறைக்கும் நன்றிக் கடன் செலுத்துவது போல மாநில அளவில் சாதனை படைத்து பெருமைப்படுத்தியுள்ளார்வினிதா

உணவில்லாமல்.. உடையில்லாமல்..

மற்றொரு சாதனை மாணவியான ரேணுகாதேவியின் கதை மிகவும் சோகமானது. வறுமையின் பிடியில் சிக்கியுள்ளகுடும்பத்திலிருந்து வரலாற்றுப் பாடத்தில் முதலிடம் பெற்று வரலாறு படைத்துள்ளார் ரேணுகா தேவி.

இவரது தந்தை மோகன் ராஜ் ஒரு கூலித்தொழிலாளி. தினந்தோறும் வேலை கிடைத்தால் தான் சம்பளம்,அப்போதுதான் சாப்பாடு என்ற ரகத்தைச் சேர்ந்தவர். கிடைக்கிற வேலையைப் பார்த்து சம்பாதித்து வீட்டுக்குப்பணம் கொடுக்கிறார் மோகன் ராஜ். இவரது அம்மா சாந்தி, வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

பெற்றோரின் நிலையை உணர்ந்த ரேணுகா தேவி எதிர்காலத்தில் கலெக்டராக வந்து தனது குடும்பத்தையும்,தன்னைப் போன்ற ஏழைகளையும் கரை சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் படிப்பில் மட்டும் கவனம்செலுத்தி வந்துள்ளார்.

மாற்று யூனிபாரம் கூட இல்லாமல், இருக்கிற ஒரே யூனிபார்மை தினமும் துவைத்துப் போட்டு காய வைத்து அடுத்தநாள் அணிந்து போய் படித்துள்ளார் ரேணுகா தேவி. வீட்டில் வசதி இல்லாததால் இரவில் சாப்பிடுவது கூடஇல்லையாம். காலையில் மட்டும் சாப்பாடு. மத்தியானம் சொல்ல முடியாது ரக வாழ்க்கை.

வறுமை என்னை உடல்ரீதியில் வறுத்தியிருக்கிறது. ஆனால், எது மன உறுதியை இதுவரை நான் கெட்டியாகவேவைத்திருக்கிறேன் என்று சொல்லும் ரேணுகா தேவி கூறுவதைக் கேடடபோது நம் கண்கள் கலங்கின.

எனது லட்சியக் கனவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறும் ரேணுகா தேவிக்கு மிகவும் பிடித்தபெண்மணி, ஜெயலலிதாதானாம். தனது கனவு நிறைவேற அவரைத்தான் மிகவும் நம்பியுள்ளேன் என்கிறார்.

கலெக்டராகும் கனவில் உள்ள ரேணுகா தேவியின் மீது ஜெயலலிதாவின் அன்புப் பார்வை நிச்சயம் விழும் என்றுஅவரது குடும்பத்தினரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

விதவை மாணவியின் சாதணை:

தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டியைச் சேர்ந்த இளம் விதவை மாணவியான கனிமொழி, கைக்குழந்தையையும்வைத்துக் கொண்டு படித்து பிளஸ் டூவில் டெக்ஸ்டைல் டிசைனிங்கில் மாநிலத்திலேயே மூன்றாவது இடத்தைப்பிடித்துள்ளார்.

பிளஸ் ஒன் படிக்கும்போதே ஒரு ஏழை விவசாயிக்கு இவரைத் திருமணம் முடித்துத் தந்தனர். ஆனால், இவர்கர்ப்பிணியாக இருக்கும்போதே கணவர் இறந்துவிட்டார். அடுத்து ஆண் குழந்தை பிறக்க, அதையும் வளர்த்துக்கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்தினார்.

டெக்ஸ்டைல் டிசைனிங் பாடப் பிரிவில் மாநிலத்திலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X