For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரத்தின் மேலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார் நாகப்பா?

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடந்த ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவை ஒரு மரத்திலிருந்துதான் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று தடயவியல் நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றான். இந்நிலையில் டிசம்பர்8ம் தேதி கர்நாடகத்தின் செங்கடி வனப் பகுதியில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் நாகப்பா. ஆனால் அவரை யார் சுட்டுக் கொன்றதுஎன்பது இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நாகப்பா கொலை தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக கர்நாடக மாநில தடயவியல் துணை இயக்குநர் டாக்டர் என்.ஜி. பிரபாகர் மாநிலஅரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில்,

நாகப்பாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கானஅடையாளமே இல்லை.

அவருடைய சடலம் கிடந்த இடத்திற்கு அருகே உள்ள மரங்கள் மற்றும் பாறைகளில் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்திருந்தன. அந்தக் குண்டுகள் தாமிர உறை கொண்டவையாகும்.

மேலும் அங்கு கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் ஏ.கே.-47 ரகத்தைச் சேர்ந்தவை என்றும் தெரியவந்துள்ளது. மொத்தம் 3 குண்டுகள் வரை சுடப்பட்டுள்ளன.

நாகப்பாவின் உடலில் குண்டு பாய்ந்துள்ள கோணத்தை வைத்துப் பார்க்கும் போது அவர் 20 அடிஉயரத்திலிருந்து சுடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அவரை மரத்தின் மீதுஇருந்துதான் யாரோ சுட்டிருக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தடயவியல் இயக்குநரான டாக்டர் பி.எம். மோகன் இந்தக் கொலை குறித்து போலீஸ்உதவி எஸ்.பிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

நாகப்பா மீது பாய்ந்த குண்டுகளுக்கும், அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கிடந்தகுண்டுகளுக்கும் மரம், பாறை மீது பாய்ந்துள்ள குண்டுகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் வைத்திருக்கும் சந்தேகத்திற்குரிய துப்பாக்கிகளைஉடனடியாக சோதனைக்காக ஒப்படைக்க வேண்டும் என்று டாக்டர் மோகன் அவ்வறிக்கையில்கூறியுள்ளார்.

அதன்படி இரு மாநில அதிரடிப்படையினரும் சில ஏ.கே. 47 துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

நாகப்பா கொலை விவகாரத்தில் 23 பேர் மீது போலீசார் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல்செய்துள்ளனர். இவர்களில் 9 பேர் தலைமறைவாக உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X