For Daily Alerts
Just In
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி
அம்பாசமுத்திரம்:
பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்வேலையா. அவருடைய மகன் சாஸ்தா செல்வம் (18).
பாபநாசம் அருகே முண்டந்துறையில் உள்ள பழைய சொரிமுத்தையனார் கோவிலுக்கு சமீபத்தில்சாஸ்தா செல்வம் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
பின்னர் அவர் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று அவர் குளித்தார். ஆனால் அவருக்கு நீச்சல்தெரியாது.
ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று விட்ட செல்வம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.அவருடைய உடல் நேற்று மீட்கப்பட்டது.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


