போதையில் சு.சுவாமி மீது பாட்டில் எறிந்த வாலிபர்!
மதுரை:
மதுரையில் ஜனதா கட்சிச் தலைவர் சுப்பிரமணிய சுவாமி பொது மக்களைச் சந்தித்து மனுக்களை வாங்கிக்கொண்டிருந்தபோது, அவர் மீது மது பாட்டில் வீசப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை சுவாமியின் கமாண்டோபடையினர் விரட்டிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மக்களிடம் புகார் மனுக்களை பெறப் போவதாக சு.சுவாமி அறிவித்திருந்தார். அதன்படி கிருஷ்ணாபுரம்காலனி பகுதியில் நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில், புகார் மனுக்களை வாங்கினார்.
மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, ஏராளமான பெண்கள் அங்கு திரண்டனர். அனைவரும் முண்டியடித்துக்கொண்டு சுவாமியிடம் மனுக்கள் கொடுத்தனர். அப்போது, மேல் மாடியிலிருந்து ஒரு மது பாட்டில் வந்துவிழுந்தது.
இதனால் சுவாமிக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்த கமாண்டோ படையினர் உடனடியாக மாடிக்குச் சென்றுபாட்டில் வீசிய ராஜேந்திரன் என்ற வாலிபரைப் பிடித்தனர்.
போதையில் இருந்த அவர் மதுவைக் குடித்துவிட்டு பாட்டிலை சும்மா வெளியே வீசியதாகவும் கீழேசுப்பிரமணியம் சுவாமி நிற்பது எனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
ஆனாலும் அவரை நாலு சாத்து சாத்திய கமாண்டோக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். டீக்கடையில் டீமாஸ்டராக இருப்பதாகவும் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை என்றும் அவர் போலீஸாரிடம்தெரிவித்துள்ளார்.


