மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனின் பி.ஏ. கைது: லஞ்சம் வாங்கியபோது சி.பி.ஐ. அதிரடி
டெல்லி:
ஐ.ஆர்.எஸ். அதிகாரிக்கு டிரான்பர் வாங்கித் தருவதாகக் கூறி ரூ . 4 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அமைச்சர்செஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளர் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். அவரது டெல்லி வீட்டிலும்அமைச்சருக்கு இடைத் தரகராக இருந்து வரும் சென்னையைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கெளண்டன்டின் வீட்டிலும்சி.பி.ஐ. ரெய்ட் நடந்தியுள்ளது.
மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் மத்திய நிதித்துறை இணையமைச்சராக உள்ளார். இவரது தனிஉதவியாளரான பெருமாள் சாமி என்ற பாபுவை சி.பி.ஐ. பொறி வைத்துப் பிடித்தது. லஞ்சம் வாங்கியபோதுகையும் களவுமாக இவர் பிடிபட்டுள்ளார்.
டிரான்ஸ்பர் கேட்ட அதிகாரி:
அனுராக் வர்தன் என்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி மும்பை வருமான வரித்துறையில் பணியாற்றி வந்தார். இவர்சமீபத்தில் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் மும்பைக்கு டிரானஸ்பர் பெற அவர்முயன்றார். மும்பையில் அவர் இருந்தது பணம் கொழிக்கும் பிரிவாகும். இதனால் மீண்டும் அங்கேயே போய்விடவிரும்பினார். இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தார்.
சென்னை இடைத் தரகர்:
தனது டிரான்ஸ்பருக்காக அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளரான பெருமாள்சாமியைத் தொடர்புகொள்ள முயன்றார். அப்போது தான் சென்னையில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்ற சார்ட்டர்ட் அக்கெளன்டண்டைப்பிடித்தால் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனிடம் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்று அவருக்குத்தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் உதவியை அனுராக் நாடினார். அவர் பெருமாள்சாமி மூலமாக டிரான்ஸ்பர்வாங்கித் தருவதாகவும், ஆனால், இதற்கு பல லட்சங்களை செலவிட வேண்டியிருக்கும் என்று கூறினார்.
பெருமாள்சாமியுடன் சந்திப்பு:
இதையடுத்து அனுராகை பெருமாள்சாமி சந்தித்துள்ளார். அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் மூலம் டிரான்ஸ்பர்வாங்கித் தருவதாகக் கூறி பணம் கேட்டுள்ளார். இந்த விவகாரம் சி.பி.ஐக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்துசெஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளரை கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்தனர்.
இந் நிலையில் அனுராக் கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்பரும் கிடைத்தது. இதற்கான உத்தரவு நேற்றுபிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லஞ்சப் பணத்தை வாங்குவதற்காக பெருமாள்சாமி டெல்லியில் உள்ளஅனுராக் வர்தனின் வீட்டுக்கு வந்தார்.
வீட்டில் வைத்து மாட்டினார்:
அப்போது அனுராகிடம் இருந்து பெருமாள்சாமி ரூ. 4 லட்சம் பணத்தை வாங்கினார். பெருமாள் சாமியைதொடர்ந்து கண்காணித்து வந்த சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை அனுராகின் வீட்டிலேயேவைத்து கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
லஞ்சம் கொடுத்த அனுராக் வர்தனும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பெருமாள் சாமியின் டெல்லி வீட்டிலும்அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது. அப்போது பல அதிகாரிகளும் டிரான்ஸ்பர் கேட்டு கொடுத்தகடிதங்களும் அவர்களிடம் வாங்கப்பட்ட பணத்தின் விவரங்களும் சிக்கின.
சென்னையிலும் ரெய்ட்:
அதே நேரத்தில் சென்னை சார்ட்டர்ட் அக்கெண்டன்ட் கிருஷ்ணமூர்த்தியின் அலுவலகம் மற்றும் தி.நகரில் உள்ளஅவரது வீட்டிலும் சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.
அப்போது அவரது வீட்டிலிருந்து ரூ. 65 லட்சம் பணமும் ரூ. 85 லட்சம் மதிப்புள்ள காசோலைகளும் (செக்குகள்)பிடிபட்டன. இது லஞ்சமாக வாங்கப்பட்ட பணம் என்று தெரிகிறது.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியையும் சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சாஸ்திரிபவனுக்குக் கொண்டு சென்றனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திஇரவோடு இரவாக டெல்லி கொண்டு செல்வார்கள் என்று தெரிகிறது.
வைகோவின் இமேஜுக்கு அடி:
பொது வாழ்வில் நேர்மை, தூய்மையை வலியுறுத்தி வரும் வைகோவின் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரின்பி.ஏ. லஞ்ச வழக்கில் சி.பி.ஐயால் பிடிபட்டுள்ளது அவருக்கு அரசியல்ரீதியில் பெரும் தர்மசங்கடத்தைஏற்படுத்தும்.
பி.ஏ. லஞ்சம் வாங்கியது எனக்குத் தெரியாது என்று அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூற முடியாது. காரணம்,லஞ்சம் தர வந்த அதிகாரிக்கு நேற்று தான் அமைச்சர் டிரான்ஸ்பர் கொடுத்துள்ளார். இதனால் ராமச்சந்திரன்சார்பில் தான் பணம் வாங்க பெருமாள் சாமி சென்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் பெருமாள் சாமி மீது ஏற்கனவே இது போன்ற லஞ்ச ஊழல் புகார்கள் உண்டு. ஆனால், இப்போது தான்சிக்கியுள்ளார்.
அதே போல இப்போது மத்திய அமைச்சர்களாக உள்ள மேலும் சிலரும் தமிழகத்தில் தங்களது இடைத் தரகர்களைவைத்துக் கொண்டு இதே போன்ற லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் சி.பி.ஐயின் தமிழகப் பிரிவு அதிகாரிகள்கூறுகின்றனர்.


