என் கணவர் கொலைக்கு அழகிரிதான் காரணம்: தா.கிருட்டிணன் மனைவி புகார்
சிவகங்கை:
தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதற்கு அழகிரிதான் காரணம் என்று தா.கிருட்டிணனின் மனைவி பத்மாவதிபோலீஸாரிடம் வாகுமூலம் அளித்துள்ளார்.
தா.கி. படுகொலை தொடர்பாக மதுரை அண்ணாநகர் போலீஸாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்இவ்வாறு பத்மாவதி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
எனது கணவர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்பதை திமுவினர் நன்கு அறிவார்கள். இது அழகிரிக்குப்பிடிக்கவில்லை.
மேலும், தென் தமிழ்நாட்டின் ஒரே தலைவராக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று அழகிரி விரும்பினார்.அதற்கு எனது கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்தார். எனவேதான் அவர் மீது பகைமை கொண்டார்.
உட்கட்சித் தேர்தல் தொடர்பாக மத்தியஸ்தம் செய்யும் வேலையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள்,இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அழகிரி மிரட்டியதாக எனது கணவர்திங்கள்கிழமை இரவு என்னிடம் கூறினார். அடுத்த நாள் காலையில் கொல்லப்பட்டுள்ளார்.
கட்சிக்குள்ளும், வெளியிலும் எனது கணவருக்கு எதிரிகள் யாரும் இல்லை. அவரது ஒரே எதிரி அழகிரியும்,அவரது ஆதரவாளர்களும்தான். தனக்கு எதிராக உள்ளதால் எனது கணவரை ஆள் வைத்து அழகிரியும், அவரதுஆதரவாளர்களும் கொன்று விட்டனர்.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் பத்மாவதி கூறியுள்ளார். இதேபோல தா.கியின் தம்பி ராமையா, அவரது மகன்நெடுஞ்செழியன் ஆகியோரும் அழகிரி மீது குற்றம்சாட்டி வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்த போலீசார் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.


