துரைமுருகனின் சொத்துக்கள்: 2வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வு
வேலூர்:
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் சொத்துக்கள் குறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்புப் போலீசார்இரண்டாவது நாளாக இன்றும் மேற்கொண்டுள்ளனர்.
காட்பாடி அருகே டைடல் வாட்டர் சப்ளை என்ற நிறுவனத்தை துரை முருகன் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில்நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்திவிட்டுச் சென்றனர்.
மேலும் துரைமுருகனின் வீடுகள், அவரது உறவினர்களின் வீடுகளின் மதிப்பு ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினர்.இவற்றை மதிப்பீடு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் வந்தனர். (திமுக ஆட்சியில்பொதுப்பணித்துறை அமைச்சராகத் தான் துரைமுருகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
விசாரணையை முடித்துக் கொண்ட இந்த டீம் இரவில் சென்னை திரும்பியது. ஆனால், இந்த விசாரணையில் லஞ்சஒழிப்புத்துறை டி.ஐ.ஜி. நாஞ்சில் குமரனுக்கு திருப்தி இல்லையாம்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான இன்னொரு படை இன்று மீண்டும் துரைமுருகனின்சொத்துக்களை மதிப்பிட வேலூர் சென்றுள்ளது. காட்பாடியில் உள்ள மினரல் வாட்டர் நிறுவனம் தன்னுடையதல்லஎன்று துரைமுருகன் கூறி வருகிறார்.
ஆனால், இதை அவரது மகன் கதிர் ஆனந்த் தான் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.


