ராமச்சந்திரன் பிறப்பித்த அனைத்து டிரான்ஸ்பர் உத்தரவுகளும் ரத்து
டெல்லி:
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 54 வருமான வரி அதிகாரிகளிடம் லட்சக்கணக்கில்பணம் வாங்கியுள்ள செஞ்சி ராமச்சந்திரன், அவர்கள் விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்பர் உத்தரவுகளைப்பிறப்பித்துள்ளார்.
இந்த அனைத்து டிரான்ஸ்பர்களையும் நேற்றிரவு நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் ரத்து செய்தார்.
இதில் மும்பை அதிகாரி அனுராக் வர்தனின் டிரான்ஸ்பரும் அடங்கும். இவரிடம் பணம் வாங்கும்போது தான்ராமச்சந்திரனின் உதவியாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
வருமான வரித்துறையைச் சேர்ந்த 54 துணை கமிஷ்னர்கள், உதவிக் கமிஷ்னர்களுக்கு நேற்று தான் அமைச்சர்செஞ்சி ராமச்சந்திரன் இந்த மாறுதல் உத்தரவுகளைப் பிறப்பித்தார். இந்த பைல்களில் அவர் முன்பேகையெழுத்திட்டுவிட்டார். ஆனால், நேற்று தான் உத்தரவுகள் அனுப்பப்பட்டன.
ஆனால், பிரதமர் வாஜ்பாயுடன் ஆலோசனை நடத்திய ஜஸ்வந்த் சிங் நேற்றிரவு இந்த 54 பேரின்டிரான்ஸ்பர்களையும் ரத்து செய்துவிட்டார்.


