நக்கீரன் கோபால் காவல் ஜூன் 20 வரை நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலின் சிறைக் காவல்ஜூன் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் உளவாளி ராஜாமணி என்பவர் கொலை வழக்கில் கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாகவும், உரிமம்இல்லாமல் கைத் துப்பாக்கிகள்வைத்திருந்ததாகவும், நக்சலைட் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், கோபால்மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்றுடன் கோபாலின் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது. இதையடுத்துபூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்திற்கு கோபால் கொண்டு வரப்பட்டார்.
அப்போது அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்வது தொடர்பான மனுவில் கோபாலின் கையெழுத்தைப் பெற சிறை நிர்வாகிகள் தடையாகஇருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி முதல் வகுப்பு தரப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இவைகளை அனுமதிக்க உத்தரவிட்ட நீதிபதி, பின்னர் கோபாலின் காவலை ஜூன் 20ம் தேதி வரைநீட்டிப்பதாக உத்தரவிட்டார்.


