For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டன் செல்லும் நடிக, நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தாய் கிண்ணத்தில் பிச்சை எடுக்க மகன் கும்பகோணத்தில் கோ தானம் செய்தானாம்

தாய் மண்ணில் எங்கள் மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நட்சத்திரக் கலைவிழா என்ற பெயரில் தமிழர்களை சுரண்ட நாடு கடந்து வருகிறது இந்தக் கும்பல். அவர்களை ஆதரிக்காதீர்கள்.அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்குப் போகாதீர்கள்.

இந்தக் குரல் எழுந்துள்ளது லண்டனில்... குரல் தந்துள்ள இலங்கைத் தமிழர்கள்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நல நிதிக்காக லண்டன் மற்றும் துபாய் நகரங்களில் தமிழகதிரையுலக நட்சத்திரங்கள் நடத்தவுள்ள கலை நிகழ்ச்சிக்குத் தான் இந்த எதிர்ப்பு.

இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர், நடிகையர் நாளை ( 26ம் தேதி)சென்னையிலிருந்து துபாய் பயணமாகின்றனர். அங்கு 29ம் தேதி கலை நிகழ்ச்சி நடத்திவிட்டுலண்டன் செல்கின்றனர். லண்டனில் 31ம் தேதி கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆனால், லண்டனுக்கு வர வேண்டாம்.. வந்தாலும் உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்க நாஙகள் வரமாட்டோம் என இங்கிலாந்தில் பெருவாரியாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குரல்எழுப்பியுள்ளனர்.

தமிழக சினிமாகாரர்களுக்கு பாக்கெட் வற்றும்போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நினைவுக்குவந்துவிடுவது வழக்கம். முன்பு நடிகர் சங்கத்துக்கு நிதி திரண்ட சிங்கப்பூர், மலேசியாவுக்குப் போய் வந்தார்கள்.திரட்டப்பட்ட பல கோடிகளுக்கு இதுவரை கணக்கு தரவில்லை விஜய்காந்த்.

இந் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்ட வளைகுடா நாடுகள் மற்றும் லண்டனில் கலை நிகழ்ச்சிநடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதில் முன்னணி நடிக, நடிகைகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவிட்டிருப்பது தயாரிப்பாளர்கள் என்பதால் அதைப் புறக்கணிக்க முடியாத நிலையில் நடிகர், நடிகையர்உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிகளுக்களில் நடனமாட உள்ள நடிக, நடிகையர்கள் தீவிர ரிகர்சலில்ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தான் இந்த நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்குமாறு லண்டன் வாழ் தமிழர்களிடையே உரத்த குரல்எழுந்துள்ளது.

இனப் பிரச்சனையால் அகதிகளாய் நாடு விட்டு நாடு வந்து உழைப்பால் வாழ்வதற்கு பல வழிகளைக்கண்டுபிடித்து பணம் சேர்க்கிறோம். எங்களிடம் பணம் சுரண்டுவதற்கென்றே ஒரு கூட்டம் திரிகிறது. இப்போதுஇந்த சுரண்டல் கூட்டத்தில் தமிழக சினிமா உலகமும் சேர்ந்து கொண்டுள்ளது என்கின்றனர் இலங்கைத் தமிழர்கள்.

கோடை காலம் வந்துவிட்டாலே கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் களியாட்டங்கள் நடத்தி உழைப்பவர்களைசுரண்டும் இந்தக் கும்பல்கள் இப்போது தமிழக சினிமா கலைஞர்களையும் தங்கள் சுரண்டல்களுக்குப் பயன்படுத்தஆரம்பித்துள்ளார்கள் என்கிறார்கள் லண்டனில் பெருவாரியாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள்.

இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு தங்களது சங்கங்கள் மூலம் அவர்கள் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.

பிரசாந்த் நைட், ராதிகா தலைமையிலான நிகழ்ச்சி என லண்டனில் நிகழ்ச்சிகள் நடத்தி கோடிக்கணத்தில் நம்பணத்தை சுருட்டியுள்ள இவர்கள் இப்போது மெகா ஸ்டார் நைட்-2003 என்ற பெயரில் நம்மை சுரண்டவருகிறார்கள். அவர்களைப் புறக்கணிப்பீர் என்று அழைப்பு விடுத்துள்ளன பல்வேறு தமிழர் அமைப்புகள்.

வானம் பொய்ந்ததால் எலி திண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்ட தஞ்சை விவசாயிகளுக்கோ, காவிரி பிரச்சனையில்பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கோ நன்மை செய்ய இவர்கள் பணம் திரட்ட இங்கே வரவில்லை.

தமிழகத்தில் சினிமா மூலம் பணம் குவித்து வைத்திருக்கிற தமிழத் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுகளை மேலும்நிரப்பத்தான் இங்கு வந்து கலை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம்என்கின்றன இலங்கைத் தமிழர் அமைப்புகள்.

சென்னை:

ஆனால், இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் நாளை நடிகை, நடிகையர் சுமார் 40 பேர் துபாய்புறப்படுகின்றனர். முதல் குழு 26ம் தேதி காலை7மணிக்கு கிளம்புகிறது.

அடுத்த குழு 9 மணி விமானத்தில் செல்கிறது. மூன்றாவது குழு 27ம் தேதி காலை இரவு 9மணிக்குச்செல்கிறது. 29ம் தேதி காலை 4 மணிக்கு கடைசிக் குழு துபாய் செல்கிறது.

துபாயில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு லண்டன் செல்லும் இவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டவும்,இவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் இலங்கைத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X