மலேசியாவில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் கைது
பெங்களூர்:
பெங்களூரைச் சேர்ந்த ஐ.பி.எம். கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சாப்ட்வேர் என்ஜினியர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நரேந்திர பாபு என்ற அந்த ஊழியர் ஐ.பி.எம்மின் திட்டமிடல் பிரிவில் பணியாற்றுகிறார். இவர் வேலைசம்பந்தமாக மலேசியா சென்றார். அங்கிருந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தியா திரும்ப விமானம் ஏறச்சென்றபோது விமான நிலையத்தில் வைத்தே இவரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. சமீபத்தில் மலேசியாவில் இந்திய சாப்ட்வேர்நிபுணர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத்தெரிவித்ததையடுத்து மலேசியா மன்னிப்பு கோரியது.
இந் நிலையில் இந்தக் கைது சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரில் உள்ள ஐ.பி.எம். தலைமை அலுவலகத்தைத்தொடர்பு கொண்டபோது இது குறித்துப் பேச மறுத்துவிட்டனர்.


