ஒரு தலைக்காதல்: பெண் மீது "ஆசிட்" வீசிய வாலிபர்
சென்னை:
தான் காதலித்த பெண், இன்னொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்டதை அறிந்து கோபமுற்ற இளைஞர், அந்தப்பெண் மீது ஆசிட் வீசினார். இதனால் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் வெந்து போனது.
நிர்மலா என்ற அந்தப் பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் வசித்த ஜப்பான் என்ற வாலிபர் காதலித்துள்ளார்.ஆனால் அந்தக் காதலை நிர்மலா ஏற்கவில்லை. இருந்தாலும் ஒருதலையாக ஜப்பானின் காதல் தொடர்ந்தது.
இந் நிலையில் நிர்மலாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதை அறிந்ததும் ஜப்பானுக்குகடும் கோபம் ஏற்பட்டது.
மாப்பிள்ளை வீட்டில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு நிர்மலா, அவரது தாத்தா தீனதயாளன், உறவினர்கள் சித்ரா,ஏகாம்பரம் ஆகியோர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது ஜப்பான் ஆசிட்ஊற்றிவிட்டு ஓடினார்.
இதில் நிர்மலா படுகாயமடைந்தார். உடன் வந்தவர்களுக்கும் ஆசிட் பட்டு உடல் வெந்து போனது. ஆனால், இதைவெளியில் சொன்னால் காதல் விவகாரத்தால் திருமணம் தடைபடுமே என்று பயந்த இவர்கள் ஆசிட் வீசப்பட்டதைமறைத்துவிட முடிவு செய்தனர்.
நால்வரும் சிகிச்சைகாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இதில் நிர்மலாவின் மீதானஆசிட் காயம் மிக அதிகமாக இருந்தது. அவரது உடல் வெந்து போய் இருந்தது. இதையடுத்து அவர்களிடம்டாக்டர்கள் எப்படி இச் சம்பவம் நடந்தது என விசாரித்தனர்.
ஆனால், வீட்டில் ஆசிட் பாட்டில் கொட்டிவிட்டதாக அவர்கள் பொய் கூறினரா. ஆனால் சந்தேகமடைந்தமருத்துவர்கள் போலீசாருத்துத் தகவல் தந்தனர். இதையடுத்து போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது தான்ஜப்பான் ஆசிட் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாஜிஸ்திரேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்துநிர்மலாவிடம் வாக்குமூலமும் வாங்கினர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து ஜப்பானை போலீசார் தேடிவருகிறார்கள்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார்.


