துருக்கியில் மலையில் மோதியது விமானம்: 74 பேர் பலி
அங்காரா:
துருக்கியில் நடந்த விமான விபத்தில் 74 பயணிகள் உயிரிழந்தனர்.
உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான அந்த விமாணம் கிர்கிஸ்தானில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்குப் பறந்துகொண்டிருந்தது ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்பெயின் நாட்டு வீரர்கள் உள்பட74 பேர் அதில் பயணம் செய்தனர்.
எரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் துருக்கியின் வடமேற்கில் உள்ள கருங்கடலை ஒட்டிய டிரப்சோன்என்ற இடத்தில் தரையிறங்க முயன்றது. ஆனால், பனி மூட்டம் மிக அதிகமாக இருந்ததால் இரண்டு முறைதரையிறங்க முடியவில்லை.
மூன்றாவது முறையாக தரையிறங்க முயன்றபோது அருகில் உள்ள மலை முகட்டின் மீது அந்த விமானம் மோதிவெடித்துச் சிதறியது.
இன்று அதிகாலை இச் சம்பவம் நடந்தது. அதில் 62 பயணிகளும் 12 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம்வெடித்துச் சிதறியதில் அதில் இருந்த 74 பேரும் உயிரிழந்தனர்.
அந்த விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும் ஒய்.ஏ.கே.-42 ரகத்தைச் சேர்ந்தது.
முதல் இரண்டு முறை தரையிங்க முயன்றபோது தன்னால் ரன்-வேயை பார்க்கவே முடியவில்லை என தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு பைலட் தகவல் தந்தார். மூன்றாவது முறையாக விமானம் தரையிறங்கமுயற்சித்தபோது ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது.
அப்போது தான் அது மலையில் மோதி வெடித்துள்ளது.


