அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் படுகொலை
கோவை:
கோவை மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அவரது வீட்டிலேயேகொலை செய்யப்பட்டுள்ளார்.
பல்லடம் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக இருந்தவர் டாக்டர் பாண்டுரங்கன் (வயது50). இவரது குடும்பத்தினர் கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்துக்குச் சென்றிருந்தனர்.
வடுகம்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் பாண்டுரங்கன் மட்டும் தனியே இருந்தார். அவரும்நேற்றிரவு சிருங்கேரி புறப்பட இருந்தார்.
இந்த நிலையில் சிலர் பாண்டுரங்கனை சரமாறியாக வெட்டிக் கொன்றுள்ளனர். முகத்திலும் அரிவாள்வெட்டு விழுந்துள்ளது. கிட்டத்தட்ட உடலில் 6 இடங்களில் வெட்டப்பட்டுள்ளார் அவர்.
இதையடுத்து வீட்டில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகை, பணத்தைகொள்ளையடித்துவிட்டு, வீட்யையும் வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுத் தப்பியுள்ளனர்.
இந் நிலையில் அப் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார் என்பவரின் தம்பி உடல் நலம்பாதிக்கப்பட்டது. இதையடுத்து நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த இருவரும் டாக்டரிடம் வந்தனர்.இருவரும் வீட்டைத் தட்டித்தட்டிப் பார்த்துவிட்டு பின்னர் உள்ளே போன போது தான் டாக்டர்கொல்லப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது.
உடனே அவர்கள் போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
வீட்டில் டாக்டர் தனியே இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தான் இதைச்செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.


