For Daily Alerts
Just In
தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, சொத்துத் தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகனை போலீஸார் தேடிவருகிறார்கள்.
மதுரை மேலூர் அருகே உள்ளது கள்ளம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச் சாமி. இவரது மகன் மகராஜன்.தந்தைக்கும், மகனுக்கும் இடையே சொத்துப் பிரிப்பதுதொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று வெள்ளைச்சாமியுடன் தகராறு செய்துள்ளார் மகராஜன். அப்போது ஆத்திரமடைந்து, தந்தையை அரிவாளால்சரமாரியாக வெட்டித் தள்ளினார் மகராஜன்.
இதில் வெள்ளைச்சாமி பரிதாபமாக இறந்து போனார்.தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


