For Daily Alerts
Just In
அரிசி வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகாது: அமைச்சர் தகவல்
சென்னை:
ரேசன் கடையில் அரிசி வாங்காவிட்டால் ரேசன் அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது என்றுகூட்டுறவுத்துறை அமைச்சர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜூன் 1ம் தேதி முதல் ரேஷன் அரிசிக்கான கூப்பன்கள் வினியோகிக்கப்படவுள்ளன. ரேஷன்கடைகளில் அரிசி வாங்கும்போது வேறு பொருட்களை வாங்க நிர்பந்திக்கும் கடைக்காரர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் அரிசி வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது. கடந்த ஆண்டைப் போலவேஇந்த ஆண்டும் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு ரேஷன் அரிசிக்கான கூப்பன்கள்வழங்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார் அமைச்சர்.


