For Daily Alerts
Just In
திருச்சியில் 5 மணி நேரம் அடை மழை
திருச்சி:
திருச்சி நகரில் தொடர்ந்து 5 மணி நேரம் அடை மழை பெய்து நகரையே வெள்ளக் காடாக்கியது. இருப்பினும் வெம்மை தணிந்துகுளுமை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நேரத்தில், திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. திருச்சியில் கடந்த5 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு கன மழை பெய்யத் தொடங்கியது. அதிகாலை 1.30 மணிக்குத்தான் மழை விட்டது.இந்த அடை மழையால், நகரமே வெள்ளக்காடாகியது.
இருப்பினும், கடும் வெப்பம் தணிந்து, குளுமை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல, பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை தாம்பரம்,திருநெல்வேலி, நீலகிரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.


