For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேம்பஸ் இன்டர்வியூ: 80 சதவீத அண்ணா பல்கலை மாணவர்களுக்கு வேலை கிடைத்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தக் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 80 சதவீதமாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இவர்களுக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.45 ஆயிரம் வரையிலான மாத ஊதியத்தில் வேலைகள்கிடைத்துள்ளன.

குறிப்பாக பி.டெக், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் , எலெக்ட்ரிக்கல் அண்ட்எலெக்ட்ரானிக்ஸ் , கம்ப்யூட்டர் சய்ன்ஸ் , பிரிண்டிங் டெக்னாலஜி, புரோடெக்சன் என்ஜினியரிங்போன்ற பாடப்பிரிவுகளில் வேலை கோரிய அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டது.

வேறு பாடப் பிரிவுகளுடன் இன்பர்மேஷன் டெக்னாலஜியையும் படித்து இரட்டைப் பட்டம் பெற்ற30 மாணவர்களுக்கும் எம்.சி.ஏ. மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துள்ளது.

எம்.பி.ஏ. மாணவர்களில் 85 சதவீதம் பேருக்கும் மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் 96 சதவீதம்பேருக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது.

இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ், காக்னிஸன்ட் டெக்னாலஜி போன்ற நிறுவனங்கள் தான் மிகஅதிகமான மாணவர்களை வேலைக்குச் சேர்ந்துள்ளன. ஆனால், முன்பு போல் அல்லாமல்ஊதியத்தை குறைவாகவே தர முன் வந்துள்ளன.

முன்பெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ரூ. 40,000 வரை ஊதியம் தந்த நிறுவனங்கள் இப்போது அதைசராசரியாக ரூ. 25,000 ஆகக் குறைத்துவிட்டன.

கடந்த ஆண்டு சாப்ட்வேர் தொழில்துறையின் நிலைமை உலகளவில் மோசமடைந்ததால் வெறும் 45பேர் மட்டுமே கேம்பஸ் இனடர்வியூ மூலம் வேலையில் சேர்ந்தனர்.

ஆனால், இந்த ஆண்டு 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இந்த ஆண்டுஅண்ணா பல்கலைகழகத்தில் 900 பேர் படிப்பை முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில்200 பேர் தவிர மற்ற அனைவருக்கும் கேம்பசிலேயே வேலை கிடைத்துவிட்டது.

சாப்ட்வேர் தொழில்துறை மீண்டும் தலை நிமிர்த்த ஆரம்பித்துள்ளதன் ஆரம்ப அறிகுறியாகவேஇதை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கருதுகின்றனர்.

ஆனால், மற்ற அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த அளவுக்கு கேம்பஸ்இன்டர்வியூ மூலம் மாணவர்கள் வேலைக்குச் சேர்க்கப்படவில்லை. ஆனால், இங்கும் கடந்தஆண்டைவிட அதிகமான இன்டர்வியூக்கள் நடந்து கூடுதல் மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப்பெற்றுள்ளனர்.

முன்பெல்லாம் எல்லா கல்லூரிகளுக்கும் படையெடுக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்த முறை மிகக்குறைவான அளவிலேயே கேம்பஸ் இன்டர்வியூவை நடத்தின.

பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழம், டெல்லி, மும்பை ஐ.ஐ.டிக்களில்போய் தங்களுக்கு வேண்டிய ஊழியர்களை தேர்வு செய்து கொண்டுவிட்டன. சாப்ட்வேர் துறையில்வேலை வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் குறைந்த ஊதியம் கொடுத்தாலே நாட்டின் மிகச் சிறந்தகல்வி நிறுவனங்களின் மாணவர்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் சாப்ட்வேர் நிறுவனங்கள் கல்லூரிகள் பக்கம் தலை காட்டாமல் ஐ.ஐ.டிக்களிலேயே போய்தங்களுக்கு வேண்டிய மாணவர்களை இழுத்து வந்துள்ளன.

முன்பு ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ஊதியம் அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருந்தது. இதனால் அரசு,தனியார் கல்லூரிகளுக்கு சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் சென்றன. இப்போது பெரிய நிறுவனங்கள்தான் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனவே தவிர சிறிய நிறுவனங்கள்இன்னும் சிரமத்தில் தான் உள்ளன.

இதனால் மற்ற கல்லூரிகளில் பெரிய அளவில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X