• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புலிகளுக்கு அதிக நிதிச் சுதந்திரம்: இலங்கை அறிவிப்பு

By Staff
|

கொழும்பு:

வட-கிழக்கு மாகாணங்களில் மறு கட்டமைப்பு மற்றும் மறு குடியேற்றப் பணிகளில் ஈடுபட விடுதலைப் புலிகளுக்குநிதியும். பொருளாதாரச் சுதந்திரமும் வழங்க இலங்கை அரசு முன் வந்துள்ளது.

இந்த சமரசத் திட்டத்தின் மூலம் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு வரவழைக்கும் முயற்சிகளில் இலங்கைஅரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட எந்த விஷயத்தையும் இலங்கை அரசுசெயல்படுத்தாததால் பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் விலகினர். மேலும் பேச்சுவார்தையே வெட்டி வேலைஎன்றும் கருத்து தெரிவித்த புலிகள் இனி பேச்சும் கிடையாது அதே நேரம் மீண்டும் ஆயுதப் போராட்டத்திலும்ஈடுபட மாட்டோம் என்று அறிவித்தனர்.

அதே போல ஜப்பானில் நடக்கும் நிதியுதவி மாநாட்டையும் புறக்கணிப்போம் என்று கூறினர்.

மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமானால் வட-கிழக்குப் பகுதியில் தங்கள் தலைமையில் அனைத்துத்தமிழர் அமைப்புகளையும் கொண்ட சுயாட்சியான இடைக்கால நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என புலிகள்நிபந்தனை விதித்துள்ளனர்.

இதை ஏற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தயாராக இருந்தாலும் அதிபர் சந்திரிகா இத் திட்டத்தைஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டார். புலிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் ரணில் அரசைக் கலைக்கவும்தயங்க மாட்டேன் என மிரட்டியுள்ளார்.

சந்திரிகாவுக்கும் புலிகளுக்கும் இடையே மாட்டிக் கொண்டுள்ள ரணில் அரசு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இதன்படி வளர்ச்சிப் பணிகளுக்காக ஒரு அமைப்பை நிறுவுவது, வட கிழக்குப் பகுதிகளில் மறு கட்டமைப்புப்பணிகளைத் தொடங்கவும், இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்தவும் அந்த அமைப்பின் மூலம்நடவடிக்கை எடுப்பது, இந்த அமைப்பில் புலிகளுக்கு முக்கிய இடம் வழங்குவதோடு இந்தப் பணிகளில் ஈடுபடஅவர்களுக்கு நிதிச் சுதந்திரமும் அளிப்பது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இத் தகவலை அரசியல் சட்ட விவகாரத்துறை அமைச்சரும் பேச்சுவார்த்தைகளில் அரசுத் தரப்பின் தலைவருமானபெரிஸ் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இந்த அமைப்பின் மூலம் புலிகளும் நாங்களும் நிறைவேற்ற விரும்புவதை (மறு கட்டமைப்புமற்றும் மறு குடியேற்றம்) விரைவில் செய்ய முடியும். வட கிழக்குப் பகுதியில் இந்தப் பணிகளை புலிகளேமேற்கொள்ளலாம். இத் திட்டத்தை நார்வே அமைதித் தூதர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் புலிகளுடன்தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

இந்த புதிய திட்டத்தை ஏற்கவும் அமலாக்கவும் எங்களுக்கும் புலிகளுக்கும் மிகவும் தைரியமும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் வேண்டும் என்றார் பெரிஸ்.

மேற்கொண்டு இத் திட்டம் குறித்த முழு விவரத்தையும் தர மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில் வரும் ஜூன் 9ம் தேதி ஜப்பானில் நடக்கவுள்ள நிதியுதவி மாநாட்டில் புலிகள் பங்கேற்கவாய்ப்பிருப்பதாகவும் பெரிஸ் கூறினார். இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக புலிகள் இன்னும்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இதனால் அதில் புலிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாதுஎன்றார்.

இதற்கிடையே அரசின் புதிய சமரசத் திட்டத்தோடு நார்வே அமைதிக் குழுவின் தலைவர் எரிக் சோல்ஹைம்நேற்றே கிளிநொச்சி சென்று புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில்அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X