For Daily Alerts
Just In
இலங்கைக்கு வெல்டிங் கருவிகள் கடத்தல்: 4 தமிழ் அகதிகள் கைது
மதுரை:
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பழுது பார்க்க உதவும் வெல்டிங் ராட்கள், கருவிகளைக் கடத்த முயன்ற 4இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
மண்டபம் குடியேறியோர் முகாமைச் சேர்ந்த இந்த நால்வரும் நேற்றிரவு வெல்டிங் ராட்கள், வெல்டிங் கருவிகள்,உடைகள், சோப்புகள் உள்ளிட்டவைகளை படகில் ஏற்றிக் கொண்டிருந்தபோது அவர்களை ரோந்து சென்றபோலீசார் பிடித்தனர்.
இவற்றை அவர்கள் யாழ்பாணத்துக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது. ஆயுதங்களை பழுதுபார்ப்பதற்காகவெல்டிங் கருவிகள் கோரப்பட்டதாகவும் இதற்காகவே அவற்றைக் கடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


