பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாமே: கருணாநிதி
சென்னை:
வீட்டிலும் நாட்டிலும் பிரச்சனைகள் நிலவுவதால் தனது 80வது பிறந்த நாள் விழாவை திமுகவினர்கொண்டாட வேண்டாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
வரும் ஜூன் 3ம் தேதி எனது 80வது பிறந்த நாள் வருகிறது. இதற்கு முன்பும் ஓரிரு சமயங்களில்எனது பிறந்த நாளைக் கொண்டாடமல் இருந்துள்ளேன். அதுபோல இந்த ஆண்டும் பிறந்த நாள்கொண்டாட்டங்களை தவிர்த்திட நினைக்கிறேன்.
திமுகவின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வந்த முரசொலி மாறன், கடந்த 9 மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கிற நிலையில் பிறந்த நாளை நினைத்திடவும்முடியுமா?.
என் இனிய தம்பிகளில் ஒருவரும் ஈடற்ற தளகர்த்தர்களில் ஒருவரும் என் பாசத்திற்குரியவருமானதா.கிருட்டிணன் படுகொலை, அதைத் தொடர்ந்து அழகிரி கைது, பொய் வழக்கு என மனதுக்குப்பிடிக்காத நிகழ்வுகள்.
இவை தவிர இயற்கையும் வஞ்சித்து வறட்சியும் வறுமையும் தாண்டவமாடுகிறது. விவசாயிக்கேசோறில்லாத கொடூரம்.
தமிழகம் முழுவதும் கொலை- கொள்- விபத்து நாள்தோறும் நாள்தோறும்.
தேள் போல் இந்தச் செய்திகளும், செயல்களும் என் சிந்தையில் கொட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் பிறந்த நாள் கொண்டாடங்களை தவிர்த்திடவே நினைக்கிறேன் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
காவிரிப் படுகையில் கடும வறட்சி நிலவியதால் கடந்த ஆண்டும் கருணாநிதி தனது பிறந்த நாள்கொண்டாட்டங்களைத் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


