ராணி மேரி ஆசிரியைகள் இடமாற்றம்: வாபஸ் பெற அரசுக்கு கோரிக்கை
சென்னை:
ராணி மேரிக் கல்லூரி ஆசிரியைகள் 7 பேர் பழிவாங்கும் விதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடுஅரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராணி மேரிக் கல்லூரி இடிப்பை எதிர்த்து மாணவிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறிஆசிரியைகள் 7 பேரை அ.தி.மு.க அரசு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அதிரடியாக இடமாற்றம்செய்துள்ளது.
தற்கு கல்லூரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்க பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ராணி மேரிக்கல்லூரியிலிருந்து வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 7 பேராசிரியைகளையும் தொடர்ந்துராணி மேரிக் கல்லூரியிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
ஆசிரியையகளின் இடமாற்றம் இதுவரை கவுன்சிலிங் மூலம்தான் நடந்து வந்தது. ஆனால், இந்த ஆசிரியைகள்விஷயத்தில் அந்த நடை முறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை அச்சுறுத்தும் பழிவாங்கல் இடமாற்றங்களை உடனே ரத்து செய்து மீண்டும் அவர்களை ராணிமேரிகல்லூரியில் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கல்வி அமைச்சரை அரசு ஆசிரியர் கழகம் கேட்டுக்கொள்கின்றது.
மாநிலம் முழுவதிலும் மொத்தம் 41 ஆசிரியர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்தஇடமாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
சென்னையில் கூடிய அரசு கல்லூரி ஆசிரியர் கழக ஆட்சிக்குழு இந்த இடமாற்றங்களை எதிர்த்து அடுத்த கட்டநடவடிக்கையை முடிவு செய்ய மாநிலச் செயற்குழுவை சென்னையில் கூட்டுவது என முடிவு செய்துள்ளது.


