For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சதாம்..வாஜ்பாய்..இத்தாலி..அமெரிக்கா: சுவாமி திடுக் அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சதாம் ஹூசேனிடம் பணம் பெற்ற இந்திய அரசியல்வாதிகள் குறித்து விரைவில் ரகசியத்தை வெளியிடப்போவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் குறித்து விரிவுரையாற்ற நான் மீண்டும்அழைக்கப்பட்டுள்ளேன். ஆகவே வரும் 18-ம் தேதி பாஸ்டன் சென்று அங்கு இரண்டு மாதங்கள்தங்கவுள்ளேன்.

மேலும் அமெரிக்க செனட் உறுப்பினர் தாமஸ் ஹார்க்கின்ஸ் மற்றும் அமெரிக்க மக்கள்பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் ஜோஸஃப் பிட்ஸ் ஆகியோரால் கூட்டப்பட்டுள்ளஇந்தியா-பாகிஸ்தான் உறவுகள் குறித்து மாநாட்டில் ஜுலை 24-ம் தேதியன்று உறையாற்றஉள்ளேன்.

அமெரிக்காவில் இருக்கும்போதே சதாம் ஹூசேன் அரசினால் இந்திய அரசியல்வாதிகள்பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு சட்ட விரோதமாக அளிக்கப்பட்ட நிதி உதவிகள் குறித்துவிசாரித்து ஆதாரங்களைத் திரட்ட உள்ளேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோல்வியடைய செய்ய வேண்டுமெனில் அடுத்த மக்களவைதேர்தலிலும் வாஜ்பாய் அவர்களே தலைவராக இருக்க வேண்டும். வாஜ்பாய் சர்வதேச அளவில் ஒருமுக்கியத்துவமற்ற கோமாளித் தலைவர் என்றே கருதப்படுகிறார். பிரதமர் அலுவலகத்திலுள்ளமீடியா நிர்வாகிகள், இந்த உண்மையை மூடி மறைத்து வருகிறர்கள்.

தேசிய அளவிலும் வாஜ்பாய் ஒரு திறமையற்ற, ஊழல் பிரதமராகவே கருதப்படுகிறார்.

அவர் பாராளுமன்றத்தில் கண்டனம் ஏதும் இன்றி தப்பித்து வருவதற்கு காரணம், எதிர்கட்சித்தலைவரான சோனியா காந்தியுடன் அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ள ரகசிய ஒப்பந்தமேயாகும்.

தன்னுடைய கடந்த கால நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைத்துக் கொள்ள சோனியாவுக்கும்பாஜ.கவுடன் தீவிரமாக மோத முடியாத நிர்பந்தம் உள்ளது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் புராதன பொருள்கள் கடத்தப்பட்டு வருவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோனியாவுக்கும் இத்தாலியில் உள்ள அவரது குடும்பத்துக்கும்தொடர்புள்ளது. இது தொடர்பாக சோனியாவை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு சுவாமி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X