சிவகங்கையில் மேலும் 17 திமுக நிர்வாகிகள் விலகல்
சிவகங்கை:
சிவகங்கையைச் சேர்ந்த மேலும் 17 திமுக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக தங்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை, தங்களது உணர்வுகளைமதிக்காத திமுக தலைமையின் கீழ் செயல்பட விருப்பம் இல்லை என்று இவர்கள் கூறியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியும் தா.கி. வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வரவில்லை, தொலைபேசியில் கூட பேசவில்லை.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், இரண்டு முறை திருச்சி வந்து அழகிரியைச் சந்தித்துள்ளார். அவராவதுதா.கி.யின் மனைவியை சந்தித்து துக்கம் விசாத்திருக்கலாம். அடிப்படை நாகரீகம் கூட இல்லாத திமுகதலைமையின் கீழ் பணியாற்றவே வெறுப்பாக இருப்பதாக விலகியவர்கள் கூறியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் 25 நிர்வாகிகள் விலகி தா.கி. பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இப்போது மேலும்17 பேர் விலகியுள்ளனர்.
இதில் முக்கியமானவர்கள், சிவகங்கை பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட திமுகஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், மாவட்ட திமுக அவைத் தலைவர் காசி ஆகியோராவர்.
இருப்பினும் இந்த விலகல்களால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று திமுக தலைமை கருதுகிறது.தா.கிருட்டிணனின் சொந்த ஊரில் மட்டுமே கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று அண்ணா அறிவாலயத்தில் மூத்ததலைவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


