For Daily Alerts
Just In
பிரதமரின் செயலாளராக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
டெல்லி:
பிரதமர் அலுவலத்தின் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நாராயணன்நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இதற்கான உத்தரவை பிரதமர் வாஜ்பாய் பிறப்பித்தார். பொருளாதார நிபுணரான இவர் கேம்ப்ரிட்ஜ்பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர்.
1965ம் ஆண்டில் ஐ.எஸ்.எஸ். தேர்ச்சி பெற்ற இவர் தமிழக கேடர் அதிகாரியாவார். இவர் நெடுங்காலமாக மத்தியஅரசுப் பணியில் இருந்து வருகிறார். இப்போது மத்திய நிதித்துறைச் செயலாளராக இருந்து வரும் நாராயணன்வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இப்போது மத்திய செலவீனங்கள் துறைச் செயலாளராக இருந்து வரும் டி.சி.குப்தா, அடுத்த நிதித்துறைச்செயலாளராவார் என்று தெரிகிறது.


