அழகிரி ஆதரவாளர் எஸ்ஸார் கோபி வீட்டில் வீச்சரிவாள்கள் பறிமுதல்
மதுரை:
|
அரிவாளை எடுக்கும் போலீஸ்
அவரது வீட்டில் நடந்த போலீஸ் சோதனையின்போது வீட்டுக்குப் பின் பக்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2வீச்சரிவாள்கள் கைப்பற்றப்பட்டன. இவை ஒவ்வொன்றும் 3 அடி நீளம் கொண்டவை.
எஸ்ஸார் கோபியின் மனைவி சுப்புலட்சுமி, தாய்மாமன் ராமச்சந்திரன், சித்தப்பா காந்தி ஆகியோர் முன்னிலையில்போலீஸ் சோதனை நடந்தது. வீட்டிலிருந்த பீரோ, அலமாரி, சூட்கேஸ்கள், மெத்தை, அடுப்பறைப் பொருட்கள்உள்பட பல எல்லா இடத்தையும் போலீஸார் சோதனையிட்டனர். மாடியிலும் சோதனை நடந்தது.
எஸ்ஸார் கோபியின் டைரி, அழகிரியுடன் எடுத்துக்கொண்ட பாட்டோக்கள், அவரது வாக்காளர் அட்டை,ரேஷன்கார்டு, லோக்சபா தேர்தலின் பத்திரிக்கைகளில் வெளியான அவரது விளம்பரங்கள் ஆகியவற்றையும்போலீஸார் கைப்பற்றினர்.
|
அழகிரியை வரவேற்று எழுதப்பட்ட போர்டுக்குப் பின் புறம் இவை மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
இந்த இரண்டு வீச்சரிவாள்கள் தவிர, 3 அடி நீளமுள்ள வாங்கு அரிவாளும்கைப்பற்றப்பட்டது.
அழகிரி வீட்டில் நாளை ரெய்ட்:
இந் நிலையில் மதுரை சத்யசாய் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் நாளை போலீசார் சோதனை நடத்தவுள்ளனர்.


