ராஜ்குமாரிடம் தமிழக போலீஸ் ரகசிய விசாரணை: பெங்களூரில் நடந்தது
பெங்களூர்:
வீரப்பனுக்குப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக நடிகர் ராஜ்குமாரிடம் தமிழக சி.பி.சி.ஐ.டி போலீஸார்ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.
2000ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி, ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூரிலுள்ள பண்ணை வீட்டிலிருந்துராஜ்குமார் கடத்தப்பட்டார். வீரப்பனே நேரில் வந்து அவரைக் கடத்திச் சென்றான்.
நக்கீரன் கோபால், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறான் ஆகியோரின் தீவிர முயற்சிகளால் 3மாதங்களுக்குப் பின் அவர் மீட்கப்பட்டார்.
ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு ரூ.30 கோடி தரப்பட்டாக கர்நாடக முன்னள் டிஜிபி தினகர் குற்றம் சாட்டினார்.தனது புத்தகத்திலும் எழுதினார். இதையே அடிப்படையாக வைத்து கோபால் மற்றும் நெடுமாறன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது தமிழக அரசு.
மேலும் தமிழக சிபிசிஐடி போலீஸாரும் லஞ்ச ஒழிப்புப் போலீசாரும் கடந்த வாரத்தில் இருமுறை பெங்களூர்சென்று தினகரிடம் விசாரணை நடத்திவிட்டுத் திரும்பினர்.
இந் நிலையில் இன்னொரு போலீஸ் படையினர் பெங்களூர் காவேரி திரையரங்கின் அருகில் உள்ல நடிகர்ராஜ்குமாரின் வீட்டுக்கும் சென்று அவரிடமும் விசாரணை நடத்திவிட்டுத் திரும்பியுள்ளது. இந்தத் தகவல் மிகரகசியமாக வைக்கப்பட்டது.
10ம் தேதி இந்த விசாரணை நடந்துள்ளது. ஒரு டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவர் மட்டும் வந்துவிசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். பெங்களூர் வந்து விசாரணை நடத்தப் போவது குறித்து நடிகர்ராஜ்குமாருக்கும். கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கும் தமிழக அதிகாரிகள் முன் கூட்டியே தகவல் தந்தனர்.
அவர்களிடம் இருந்து அனுமதி கிடைத்த பின்னரே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜ்குமார் தவிர, அவரதுமனைவி பார்வதி, மற்றும் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


