For Daily Alerts
Just In
மணவை முஸ்தபா, சு.சமுத்திரம், வேழவேந்தனுக்கு கலைஞர் விருது
சென்னை:
2002ம் ஆண்டுக்கான, முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் கலைஞர் விருது, மறைந்த எழுத்தாளர்சு.சமுத்திரம், மணவை முஸ்தபா, வேழவேந்தன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டிதழையும் உள்ளடக்கியது இந்த விருது. தமிழ் மொழி, இலக்கிய, கலாச்சாரவளர்ச்சிக்குப் பாடுபடுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஜூன் 28ம் தேதி, மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் நடைபெறவுள்ளநிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படும்.
திமுக தலைவரும், முரசொலி அறக்கட்டளை நிறுவனருமான கருணாநிதி விருதுளை வழங்குவார். நிகழ்ச்சியில் திமுகதுணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார்.
கவியரசு வைமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
மறைந்த சு.சமுத்திரத்தின் சார்பில் அவரது குடும்பத்தினர் இந்த விருதைப் பெற்றுக் கொள்வர்.


