For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏட்டையா கொண்டு வந்த குண்டு வெடித்து பஸ் தீ பிடித்தது- பயணிகள் தப்பினர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில்அரசு பஸ் தீ பிடித்துக் கொண்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சமீபத்தில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதனைசென்னையில் உள்ள காவல்துறை தடயவியல் மையத்தில் சோதனையிட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கோவில்பட்டி நீதிமன்றத்தின் அனுமதியுடன், தலைமைக் காலவர் ஆதிலிங்கம் வெடிகுண்டுகளைசென்னைக்கு அரசு பஸ்சில் எடுத்து வந்தார்.

கிண்டி அருகே பஸ் வந்தபோது இறக்குவதற்கு வசதியாக முன் பக்கம் வந்தார் ஆதிலிங்கம். டிரைவர் சீட்டுக்குஅருகே உள்ள பானட்டின் மீது வெடிகுண்டு பார்சலை வைத்து விட்டு, டிரைவருடன் பேசியபடி வந்தார்.

பஸ் வடபழனியை நெருங்கியபோது, என்ஜினின் வெப்பத்தால் சூடான வெடிகுண்டு பார்சல் தீப் பிடித்துக்கொண்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட ஏட்டையா ஆதிலிங்கம் அதை உடனே வெளியில் தூக்கிவெளியே எறிந்தார்.

அடுத்த வினாடியே, வெடிகுண்டு பொட்டலம் பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெடிகுண்டுப் பொட்டலத்தில் இருந்து பஸ்சுக்குப் பரவிய தீ உடனடியாகஅணைக்கப்பட்டது.

இதையடுத்து ஆதிலிங்கம் மீது பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் எவ்வளவோ விளக்கம் சொல்லியும்அவரை விடவில்லை.

போலீசாருக்குத் தகவல் பறந்தது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தான் ஆதிலிங்கம்ஏட்டையா என்பதும் மற்ற விவரங்களும் தெரியவந்தன.

ஏட்டையா ஆதிலிங்கம் சற்றுத் தாமதித்திருந்தால் பஸ்சுக்குள் குண்டு வெடித்து பெரும உயிர்ச் சேதம்ஏற்பட்டிருக்கும்.

இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய துணை போலீஸ் கமிஷனர் முருகன், வெடிகுண்டை அலட்சியமாகபஸ்சில் எடுத்து வந்த ஏட்டையா ஆதிலிங்கம் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X