For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. நடத்தி வைத்த மெகா திருமணம்: 1,053 ஜோடிகள் மாலை சூடினர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jayalalithaa blessing couplesசென்னை அருகே உள்ள திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், 1053 (ஜெயலலிதாவின்ராசி எண், 1+5+3=9) ஏழை ஜோடிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று இலவச திருமணத்தைநடத்தி வைத்தார். இதற்கு ரூ. 1.1 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள கோவில்களில்ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு திருவேற்காடு கோவிலில்1008 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோன்று 1,008ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ஜோடிகளின் எண்ணிக்கை கூடவே கூட்டுத் தொகை 9 வரும் வகையில்1,053 பேருக்குத் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

காலை 9 மணிக்கு அரசு வாங்கித் தந்த புதிய பட்டு வேட்டி, பட்டு சட்டையில் மாப்பிள்ளைகளும்பட்டிச் சேலையில் மணப் பெண்களும் திருமணக் கோலத்தில் வரிசையாக உட்காரவைக்கப்பட்டனர். உடனே எம்.எல்.ஏக்கள் ஓடி வந்து மணமகன், மணமகள்கள் கைகளில் மாலைகள்தந்தனர்.

ஜெயலலிதா 10.15க்கு அங்கு வந்தார். உடனே அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கையில்தட்டுக்களோடு மேடையேறினர்.

அந்தத் தட்டுக்களில் தாலிகள் இருந்தன. அதை அவர்கள் ஜெயலலிதாவிடம் நீட்ட அதைத் தொட்டு,அவர் ஆசீர்வதிக்க உடனே வரிசையாகச் சென்று அதை மணமகன்கள் கைகளில் கொடுத்தனர்.

எல்லா தாலிகளுக்கும் அம்மாவின் அருளாசி தரப்பட்டவுடன் 10.45 மணிக்கு மைக்கைப் பிடித்தார்ஜெயலலிதா, எல்லோரும் எழுந்து நில்லுங்கள் என்றார். அனைத்து மணமகன், மகள்களும் எழுந்துநின்றவுடன், மாலையை மாத்திக்குங்க என்றார் அவர்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர்.

இப்போ திருமாங்கல்யத்தை கட்டுங்க என்றார், உடனே மைக்கிலேயே மந்திரங்ள் முழங்க,நாதஸ்வரமும் தவிலும் அதிர, 1,053 மணமகன்களும் தங்களது மணப்பெண்களின் கழுத்தில் அதைக்கட்டினர்.

இப்போ குங்குமம் வைங்க என்றார், உடனே சிமிழ்களோடு அதிமுகவினர் வரிசையாக ஆஜராகஅதிலிருந்த குங்குமத்தை மணமகள்களுக்கு மணமகன்கள் சூட்டினர்.

இதையடுத்து அட்சதைத் தட்டோடு ஜெயலலிதா மணமக்கள் உட்காந்திருந்த இடத்திற்குச் சென்று வரிசையாகஅவர்கள் மீது அட்சதை தூவி வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கினார்.

திருமணத்தைக் காண ஜோடிகளின் உறவினர்கள் பெருமளவில் வந்திருந்தனர். உறவினர்கள் சுமார்15,000 பேர் திருமணத்தைக் கண்டுகளிக்க வசதியாக திருவேற்காடு கோவில் வளாகத்தில் மிகப்பிரமாண்டமானதாக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், கடந்த முறை 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அதிமுகஆட்சியில் இருந்தபோது, மிகப் பெரிய அளவில் இதுபோன்ற திருமணங்களை செய்து வைத்துள்ளேன்.

முதலில் சிதம்பரத்தில் 2,500 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. பின்னர் திருச்சி மாநகரில் 5,004 ஜோடிகளுக்குதிருமணம் நடத்தப்பட்டது. தற்போது இங்கு 1,053 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளேன்.

இதுபோன்ற திருமணங்களை நடத்துவதற்கு மக்கள் ஆதரவும், ஆட்சியும் இருந்தால் மட்டும் போதாது, இதயம்வேண்டும், கொடுப்பினையும் வேண்டும். இதுபோன்ற நல்ல செயல்களை செய்ய கடந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.

மகிழ்ச்சியை உருவாக்காத எவருக்கும் அதை அனுபவிக்கும் உரிமை இல்லை. ஏழைகளைசந்தோஷப்படுத்துங்கள், மற்ற எல்லாமே உங்களைத் தேடி வரும். இதுவே மணமக்களுக்கு நான் கூற விரும்பும்திருமண வாழ்த்துச் செய்தி.

கோவில்கள் வெறுமனே பூஜைகளோடு தங்கள் பணியை நிறுத்திக் கொள்ளக் கூடாது. சமூகசேவைகளிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தத் திருமணங்கள் இங்குநடத்தப்பட்டன.

கோவில்கள் பராமரிப்புக்காக இந்து அறநிலையத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் கூடுதலாக உள்ளநிதியை வைத்துத் தான் இந்தத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

இந்தத் திருமணத்துக்கு ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ. 5,500 அரசின் சார்பில் செலவிடப்பட்டுள்ளது.இனி இந்த 1,053 இல்லங்களிலும் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு இன்று திருவிளக்கு ஏற்றிவைத்திருக்கிறது என்றார் ஜெயலலிதா.

திருமணம் முடிந்தபின் விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. பிறகு, மணமக்களுடன் அமர்ந்து புகைப்படம்எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா.

முன்னதாக தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான ஆம்னி பஸ்களில் அதிமுகவினரால்அழைத்து வரப்பட்ட 1,053 ஜோடிகளும், அவர்களது உறவினர்களும் தங்குவதற்காக வடபழனி,பூந்தமல்லி, ஆவடி, விருகம்பாக்கம், போரூர் ஆகிய இடங்களில் 15 திருமண மண்டபங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டன. ஒவ்வொரு ஜோடியுடனும் தலா 10 உறவினர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இலவசத் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம்,வெள்ளி மெட்டி, ஜரிகை வேட்டி, துண்டு, சட்டை, பட்டுப் புடவை, ஜமக்காளம், பாய், தலையணைஆகியவை அரசின் சார்பில் சீதனமாக வழங்கப்பட்டது.

இதுதவிர காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச் சிமிழ், எவர்சில்வர் குடம், டம்பளர், தட்டு,சிறிய தட்டு, கிண்ணம், சாப்பாட்டு வாளி, கரண்டி, வாளி, சாப்பாடு கேரியர், வாணலி, பால்காய்ச்சும் சட்டி ஆகியவையும் தரப்பட்டன.

மணமகன், மணமகள்கள், உறவினர்களை அழைத்து வர போக்குவரத்துச் செலவே ரூ. 20லட்சத்தைத் தாண்டியதாகத் தெரிகிறது. மேலும் விருந்து, பந்தல் செலவுகள், கல்யாண மண்டபசெலவு ரூ. 30 லட்சத்துக்கும் அதிகமாமாம்.

கர்ப்பிணி விதவைக்கு மறுமணம்:

இந்தத் திருமணம் செய்து கொணடவர்ளில் ஒருவர் கர்ப்பிணி விதவையாவார். சேலத்தைச் சேர்ந்த அவரது பெயர்சுந்தரி (வயது 32). இவருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர். மீண்டும் அவர் கர்ப்பிணியாக இருந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் இவரது கணவர் நடராஜன் மாரடைப்பால் காலமாகிவிட்டார்.

இலவசத் திருமணம் செய்து வைக்க அதிமுகவினர் பெயர்களைச் சேர்ப்பதை அறிந்து சுந்தரியின் பெயரையும்அவது பெற்றோர் பதிவு செய்தனர். இந்தத் திருமணத் திட்டத்தின் கீழ் மணம் முடிக்க வந்த பட்டரைத்தொழிலாளியான விஜயராகவன் (வயது 33), சுந்தரி குறித்து கேள்விப்பட்டு அவரைத் திருமணம் செய்ய முன்வந்தார். அவர்களுக்கும் இன்று திருமணம் நடந்தது.

இவர்கள் தவிர ஏற்கனவே திருமணமான சிலரும் கூட, அதிமுகவினரை சரிகட்டி, இந்த இலவசத் திருமணத்திட்டத்திலும் புகுந்து மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

திருமணம் செய்ய வந்த ஜோடிகள், நிருபர்களிடம் பேச அதிகாரிகள் தடைவிதித்துவிட்டனர்.

இன்று திருமணம் செய்விக்கப்பட்டவர்களில் 719 ஜோடிகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள், 165 ஜோடிகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர். 144 ஜோடிகள் பிற்பட்ட இனத்தினர். 22 ஜோடிகள் பழங்குடியினர். இவர்கள்தவிர 3 பேர் வெறு இனத்தினராவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X