நீதிமன்ற அவமதிப்பு: எம்.எ. சிதம்பரம் நிறுவன இயக்குனர்கள் 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை
சென்னை:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியாருக்குச் சொந்தமான ஆட்டோமொபைல்நிறுவனத்தின் 3 இயக்குனர்களுக்கும் மூன்று மாத கடுங்காவல் சிறை தண்டை வழங்கித் தீர்ப்பளித்துள்ளதுசென்னை உயர் நீதிமன்றம்.
எம்.சி.சி. நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனமும் எம்.ஏ. சிதம்பரம்செட்டியாருக்குச் சொந்தமானது.
இந்த சிட் பண்ட் நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தராமல் இந்த நிறுவனம்ஏமாற்றியது. கிட்டத்தட்ட ரூ. 165 கோடியளவுக்கு பொது மக்களிடம் இருந்து பணத்தை இந்த நிறுவனம்வசூலித்தது. ஆனால், யாருக்கும பணத்தைத் திருப்பித் தரவில்லை. வட்டியும் தரவில்லை.
இதையடுத்து இந் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் வடிவேலு,நிர்வாக இயக்குனர் ஜவஹர் வடிவேலு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுக்கக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற உயர் நீதிமன்ற டிவிஷன்பெஞ்ச் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதன்படி, எம்.ஏ. சிதம்பரம் குழுமத்துக்குச் சொந்தமான ஆட்டோமொபைல் புராடக்டஸ் ஆப் இந்தியாநிறுவனத்தின் இயக்குனர்களான வைத்தியநாத், சொக்கலிங்கம் செட்டியார், சிதம்பரம் செட்டியார் ஆகிய மூவரும்,10 மாதங்களுக்கு மாதந்தோறும், தலா ரூ. 5 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.இந்தப் பணத்தை எம்.சி.சி. நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தவிர மும்பையில் இந்தக் குழுமத்துக்குச் சொந்தமாக உள்ள 31.5 ஏக்கர் நிலத்தை விற்று அந்தப் பணத்தையும்நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த பொது மக்களுக்குத் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிபந்தனைகளை இந்த மூவரும் ஏற்றுக் கொண்டனர். இதன் பிறகு தான் வடிவேலுவுக்கும் ஜவஹருக்கும்ஜாமீன் தரப்பட்டது.
ஆனால், ஜாமீனில் வெளி வந்ததோடு நீதிமன்றத்தின் நிபந்தனைகளை இவர்கள் காற்றில் பறக்க விட்டனர்.நீதிமன்றத்திடம் உறுதியளித்தபடி பணத்தையும் மாதந்தோறும் கட்டவில்லை, மும்பை நிலத்தையும் விற்றுப் பணம்தரவில்லை.
இதையடுத்து வடிவேலுவுக்கும் ஜவஹருக்கும் ஜாமீன் போட்ட அவர்களது நிறுவனத்தைச் சேர்ந்த 3இயக்குனர்களுக்கும் 3 மாத கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் மூவருக்கும்தலா ரூ. 20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை அடுத்த 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறும், அதற்குள் அவர்கள் தண்டனையை எதிர்த்துமேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.


