பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன் தற்கொலைக்கு முயற்சி?
சென்னை:
பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. வீட்டில் இருந்துஎரிசாராயத்தைக் குடித்த அவர் அப்பல்லோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் டி.எம்.எஸ். தமிழ்நாடு இயல் இசைமன்றத்தில் தலைவராகவும் உள்ள அவர் மந்தைவெளியில் வசித்து வருகிறார்.
மன உளைச்சல் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததார். இந் நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.வீட்டிலேயே ஸ்பிரிட் எனப்படும் எரிசாரயத்தை அவர் குடித்தார். இதையடுத்து மயங்கி விழுந்த அவரைஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இப்போது அவரது உடல் நிலை தேறி வருவதாகத் தெரிகிறது.
இது குறித்து அவரது மகன் பால்ராஜ் கூறுகையில், தந்தை தற்கொலைக்கு எல்லாம் முயலவில்லை. கடும் இருமலால்பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். டானிக் என்று நினைத்துஎரிசாராயத்தைக் குடித்துவிட்டார். இதனால் தான் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்றார்.
ஆனால், வீட்டுக்கு எரிசாராயம் ஏன் வந்தது என்று தெரியவில்லை. தற்கொலை செய்யவே அதை டி.எம்.எஸ்.வரவழைத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.